ஈசன் - சிவபெருமான். ஏடு - இதழ். அவிழ்தல் - விரிதல் (மலர்தலுமாம்). |
(59) |
| 6130. | 'முற்றும் முதலாய் உலகம் மூன்றும், எதிர் தோன்றிச் |
| செற்ற முதலோரொடு செறுத்தது ஓர் திறத்தும், |
| வெற்றி உனது ஆக விளையாதுஒழியின், என்னைப் |
| பெற்றும் இலை; யான் நெறி பிறந்தும் இலென்' |
| என்றான். |
| |
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் - எல்லாப் பொருள்களும் நிறைந்த மூன்றுலகத்தில் உள்ளவர்களும்;எதிர் தோன்றி - எனக்கு எதிரிலே போர்க்களத்திலே நின்று;செற்ற முதலோ ரொடு - நமது பகைவர்களான தலைவர்களுக்குத் துணையாகச் சேர்ந்து கொண்டு;செறுத்தது ஓர் திறத்தும் - பகைத்துப் போரிட்ட போதும்;வெற்றி உனதாக - உனக்கே வெற்றி உரியதாக; விளையாது ஒழியின் - விளைவியாது போவேனானால்; என்னைப் பெற்றும் இலை - நீ என்னை உனக்கு மகனாகப் பெறவுமில்லை; யான் நெறி பிறந்தும் இலென் என்றான் - நான் உனக்கு முறையாகப் பிறந்த மகனுமல்லேன் என்றான். |
இந்திரசித்து இராவணனுக்குக் கூறிய வஞ்சினம்; இதனால் போருக்குத் தன்னையே அனுப்புமாறு வேண்டினான் எனலாம். |
(60) |
| 6131. | 'குரங்கு பட, மேதினி குறைத்தலை நடப் போர் |
| அரங்கு பட, மானுடர் அலந்தலை பட, பேர் |
| இரங்கு படர் சீதை பட, இன்று இருவர் நின்றார் |
| சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி- |
| சினத்தோய்! |
| |
சினத்தோய் - பகைவர் பால் கோபம் மிக்கவனே! குரங்கு பட - குரங்குப் படை அடியோடு இறந்து பட;மேதினி, குறைத்தலை நட போர் அரங்குபட - தலையற்ற உடல் எங்கும் நடனம் ஆடுவதால் உலகம் முழுவதும் போர்க்களம் அரங்கு போல் காணப்பட;மானிடர் அலந்தலை பட - அந்த மானிடர்கள் மனம் கலங்கி நிற்க;பேர் இரங்கு படர் சீதைபட - சீதை பார்த்தவர்கள் இரங்கும் படி துன்பப்பட; இன்று இருவர் நின்றார் - நம் பகைவர்களாக நின்ற இருவரது; சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி - தலைகளையும் மலை என நான் கொண்டு வருவதைக் காண்பாய். |