பக்கம் எண் :

44யுத்த காண்டம் 

குறைத்தலை - தலையற்ற உடல். போர் அரங்கு - போர்க்களம்.
அலந்தலை-கலக்கம் (மயக்கமுமாம்).
 

(61)
 

6132.

'சொல்லிடை கழிக்கிலை, சுருங்கிய குரங்கு என் 

கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் 

வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி, தம் 

பல்லிடை, கிழித்து இரிவ கண்டு, பயன் உய்ப்பாய். 

 

சுருங்கிய குரங்கு - உடல் சுருங்கி வற்றிய குரங்குகள்; என்
- என்னுடைய;கல்  இடை  கிழிக்கும் -   கற்பாறைகளையும்
பிளக்கும்படியான;  உருமின் கடுமை காணும்  - இடி போன்ற
கொடியதான; வில் இடை கிழித்த -  வில்லிலிருந்து  கிளம்பிச்
செல்லும்; மிடல் வாளி வெருவி -  வலிமை மிக்க அம்புக்குப்
பயந்து;தம் பல்லிடை கிழித்து - பல்லை இளித்துக் கொண்டு;
இரிவ கண்டு
- மூலைக்கொன்றாக ஓடுவதைப்  பார்த்து; பயன்
உய்ப்பாய்
- வெற்றியின் பயனை  அனுபவிப்பாய்;சொல்லிடை
கழிக்கிலை
-  இடையிலே வீணே  பேசிக் காலத்தைக் கழிக்க
வேண்டா.
 

கல் - மலை (பாறையுமாம்)  "காதல  காதல் அறியாமை
உய்க்கிற்பின்" என்ற குறளில் (குறள் 440) உய்த்தல்-நுகர்தல்
என்ற பொருளில் வந்துள்ளது.
 

(62)
 

6133.

'யானை இலர்; தேர் புரவி யாதும் இலர்; ஏவும் 

தானை இலர்; நின்ற தவம் ஒன்றும் இலர்; தாமோ, 

கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்? 

ஆனவரும் மானுடர்; நம் ஆண்மை இனிது 

அன்றோ?

 

யானை இலர் - நமது பகைவர்களுக்கு யானைப்படை இல்லை;
தேர், புரவி  யாதும்  இலர் - தேர்ப்படை,  குதிரைப்படை மற்ற
எதுவுமே இல்லை;ஏவும் தானை இலர் -   நம்மீது எய்வதற்கேற்ற
படை  பலமும் இல்லை; நின்ற   தவம்   ஒன்றும்   இலர்  -
நிலைபெற்ற தவபலமும் ஒன்றும் இல்லை;கூனல் முதுகின் - கூனி
வளைந்த   முதுகை   உடைய; சிறு குரங்கு கொடு - அற்பமான
குரங்குகளைத்   துணையாகக்   கொண்டு; வெல்வார் ஆனவரும்
மானுடர்  தாமோ?
-  நம்மை   வெல்பவரும்  இந்த மனிதர்கள்
தாமோ?நம் ஆண்மை இனிது அன்றோ - அரக்கர்களாகிய நமது
ஆண்மை நன்றாயிருக்கிறது.