'இனிது அன்றோ' குறிப்பு மொழியாக இகழத்தக்கது என்னும் பொருள் தந்து நின்றது. |
(63) |
| 6134. | 'நீரும், நிலனும், நெடிய காலும், நிமிர் வானும், |
| பேர் உலகு யாவும், ஒரு நாள் புடைபெயர்த்தே, |
| யாரும் ஒழியாமை, நரர் வானரரை எல்லாம், |
| வேரும் ஒழியாதவகை வென்று அலது, மீளேன்.' |
| |
நீரும் நிலனும், நெடிய காலும், நிமிர் வானும் - நீரும், நிலமும் நெடிது வீசும் காற்றும் நிமிர்ந்துயர்ந்த ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களுடனே;பேர் உலகு யாவும் - மிகப் பெரிதான உலகங்கள் யாவையும்;ஒரு நாள் புடைபெயர்த்தே - ஒரே நாளில் நிலைமாற்றி; யாரும் ஒழியாமை - எவரும் தப்பி விடாதபடி;நரர் வானரரை எல்லாம் - மனிதர்கள் குரங்குகள் எல்லாவற்றையும்;வேரும் ஒழியாத வகை - வேரும் கூட தப்பி விடாதபடி;வென்று அலது மீளேன் - வென்று அல்லது மீண்டு வரமாட்டேன்; |
நிமிர்தல்-உயர்தல். வேருடன்-அடியோடு. |
(64) |
வீடணன் இந்திர சித்தைக் கடிந்து கூறுதல் |
| 6135. | என்று, அடி இறைஞ்சினன் எழுந்து, 'விடை ஈமோ, |
| வன் திறலினாய்!' எனலும், வாள் எயிறு வாயில் |
| தின்றனன் முனிந்து, நனி தீவினையை எல்லாம் |
| வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும். |
| |
என்று அடி இறைஞ்சினன் - என்று கூறி இராவணனது பாதங்களில் வீழ்ந்து வணங்கிப்பின்; எழுந்து - எழுந்து நின்று; (இராவணனைப் பார்த்து)வன்திறலினாய்- மிக்க வலிமை உடைய எந்தையே!விடை ஈமோ - எனக்கு விடை தருக; எனலும் - என இந்திரசித்து கூறி நிற்க; நனி தீவினையை எல்லாம் - மிகுந்த தீவினைகள் அனைத்தையும்; வென்றவரின் நன்றுணரும் - தங்கள் தவ பலத்தாலே வென்ற முனிவர்களைவிடவும் நன்மையை உணர்ந்த; வீடணன் - வீடணன் என்னும் பெயருடையவனான இராவணனது தம்பி;வாள் எயிறு வாயில் தின்றனன் - பற்களால் உதட்டைக் கடித்தவனாக;முனிந்து - இந்திர சித்தைக் கோபித்து;விளம்பும் - பின்வருமாறு கூறலானான்; |