இறைஞ்சினன், நின்றனன் இவை முற்றெச்சங்கள். வன்திறம் - மிக்க வலிமை வாள் எயிறு - வெண்மையான பற்கள். தவத்தாலும் ஞானத்தாலும் தீவினைகளை வென்றுயர்ந்தவராகிய மேலோரினும் மெய்யுணர்வு படைத்தவன் வீடணன் என்பதை "நனி தீ வினையை எல்லாம் வென்றவரின் நன்றுணரும் வீடணன்" என்றார். |
(65) |
| 6136. | 'நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை |
| போலுமால்!-உறு பொருள் புகலும் பூட்சியோய்! |
| காலம், மேல் விளை பொருள், உணரும் கற்பு இலாப் |
| பால!-நீ இனையன பகரற்பாலையோ? |
| |
காலம் மேல் விளை பொருள் உணரும் - காலத்தையும் பின்னால் நிகழும் காரியத்தையும் உணர்கின்ற;கற்பு இலா பால! - அறிவற்ற சிறுவனே; நூலினால் - பல நூல்களையும் கற்ற நூலறிவினாலும்;நுணங்கிய அறிவு - நுணங்கிய அறிவாற்றலும்; நோக்கினை போலும்- எதிர்காலத்தை நோக்கும் திறமுடையாய் போலும்; உறுபொருள் புகலும் பூட்சி யோய் - நேர இருப்பதைக் கூறும் மனஉறுதியுடன் பேசுகிறாய்; நீ இனையன பகர்தற் பாலையோ - நீ இத்தகையவைகளைப் பேசுதல் தகுமோ? |
கற்பு-கற்றலினால் பெறும் அறிவு (கல்வியுமாம்) நூல்-நூலறிவு. நுணங்கிய-நுட்பமான. பூட்சி-மன உறுதி. |
(66) |
| 6137. | 'கருத்து இலான், கண் இலான், ஒருத்தன் |
| கைக்கொடு |
| திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்; |
| விருத்த மேதகையவர், வினைஞர், மந்திரத்து |
| இருத்தியோ?-இளமையால் முறைமை எண்ணலாய்! |
| |
இளமையால் முறைமை எண்ணலாய் - இளமைப்பருவம் காரணமாக, அரசியல் முறையை எண்ணிப் பார்க்காதவனே! கருத்து இலான் - ஓவிய ஞானமில்லாதவனும்; கண் இலான் ஒருத்தன்- கண் பார்வை இல்லாதவனுமான ஒருவன்; சித்திரம் கைக்கொடு- ஓவியம் ஒன்றைக் கையிலே எடுத்துக் கொண்டு;திருத்துவான் அனைய - இதனை நன்கு திருத்தி அமைப்பேன் என்பது போல்; செப்புவாய் - நீ பேசுகிறாய்; விருத்த மேதகையவர் - வயது முதிர்ந்த மேலான அறிஞரும்;வினைஞர் - சிறந்த |