வினையம் உடையவர்களும் இருக்கத் தகுந்த; மந்திரத்து இருத்தியோ - மந்திராலோசனை சபையில் நீ இருக்கத் தகுமோ? |
(67) |
| 6138. | 'தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர் |
| ஆயவர் நிற்க; மற்று அவுணர் ஆதியாம் |
| தீயவர், அறத்தினால் தேவர் ஆயது |
| மாயமோ? வஞ்சமோ? வன்மையேகொலோ? |
| |
தூயவர் - தூய்மை உடையவர்களும்; முறைமையே தொடங்கும் தொன்மையோர்- முறையான நல்ல செயல்களையே செய்யும் முன்னோரும்; ஆயவர் நிற்க - ஆகிய அவர்கள் (தேவராகிய) நிற்க மற்று அவுணர் ஆதியாம் தீயவர் - அசுரர்கள் முதலான தீயவர்களும்; அறத்தினால் - தாம் செய்த அறச்செயல்களால்; தேவராயது மாயமேர் - தேவர்களானது மாயத்தாலோ; வஞ்சமோ - அல்லது வஞ்சனையாலோ? வன்மையே கொலோ - தமது வலிமையினாலோ? |
தூயவர் - உள்ளம். உரை, செயல் மூன்றிலும் தூயவர்கள், மற்று-வினை மாற்றுப் பொருள் தந்தது. |
(68) |
| 6139. | 'அறம் துறந்து, அமரரை வென்ற ஆண்தொழில்- |
| திறம் தெரிந்திடின், அதுதானும் செய் தவம் |
| நிறம் திறம்பாவகை இயற்றும் நீதியால், |
| மறம் துறந்து, அவர் தரும் வரத்தின் வன்மையால். |
| |
அறம் துறந்து - நீ அறத்தை விட்டு விலகி;அமரரை வென்ற - தேவர்களை வென்ற;ஆண் தொழில் திறம் - வீரத் தொழிலின் திறத்தை; தெரிந்திடின் - ஆராய்ந்து பார்த்தால்; அதுதானும் - அதுவும் கூட;செய்தவம் நிறம் திறம்பாவகை - சிறந்த தவத்தை பெருமை மாறாத வகையிலே; இயற்றும் நீதியால்- செய்து முடித்த தன்மையால்;மறம் துறந்து - கொடுமைக்குணம் விடுத்து; அவர் தரும் வரத்தின் வன்மையால் - அந்தத் தேவர்கள் தந்த வரத்தின் வலிமையினாலாம். |
ஆண்தொழில்-வீரச்செயல். திறம்புதல்-கெடுதல். |
(69) |