பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 49

பிள்ளைமை விளம்பினை - சிறுபிள்ளைத்தனமாகப் பேசினாய்:
பேதை நீ - நீ அறிவில்லாதவனாயினை; என ஒள்ளிய புதல்வனை
உரப்பி 
-  என்று,  வலிமை மிக்க மகனான இந்திரசித்தை அதட்டி
விட்டு; என்  உரை எள்ளலை ஆம் எனின் - எனது சொற்களை
ஏளனம்  செய்யாது  கேட்பாயாயின்; தெள்ளிய பொருள் - (நாம்
கடைப்பிடிக்கக்  கூடிய)  தெளிவான  கருத்துக்களை;    இயம்பல்
ஆற்றுவென்  
-  சொல்லத்    தொடங்குவேன்;  என  அரசன்
செப்பினான்  
-   என்று,   அரசனாகிய  இராவணனை நோக்கிக்
கூறலானான்.
 

அரசன்-இராவணன்.
 

(72)
 

வீடணன் அறவுரை
 

6143.

'எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ 

வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ; 

"இந்திரப் பெரும் பதம் இழக்கிறாய்' என 

நொந்தனென் ஆதலின், நுவல்வது ஆயினேன். 

 

எந்தை  நீ - எனக்குத்  தந்தையும் நீயே;  யாயும் நீ - தாயும்
நீயே; எம்  முன்நீ  -  எனக்கு  மூத்த  தமையனும்  நீயே;  தவ
வந்தனைத்  தெய்வம்  நீ  
-   தவத்தால்   நான்    வந்தித்து
வணங்குதற்குரிய  தெய்வமும்  நீயே;மற்றும் முற்றும் நீ -  வேறு
எல்லாம் நீயே;இந்திரப் பெரும் பதம் - இந்திர பதவிக்கு நிகரான
பெரிய  அரசபதவியை;இழக்கின்றாய் என - இழக்கப் போகிறாயே
என்று; நொந்தனென்  ஆதலின் - மனம் வருந்தினேன் ஆதலால்;
நுவல்வது ஆயினேன்
- இவை சொல்லலானேன்.
 

எந்தை - எம்  தந்தை.  யாய் - தாய். எம்முன் - என்தமையன்.
இழக்கின்றாய் என்றது  இழப்பாய்   என்னும்  பொருளில்  வந்தது.
உறுதி குறித்த காலவழுவமைதி.
 

(73)
 

6144.

'கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும், 

உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும், 

சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும், 

முற்றுறக் கேட்ட பின், முனிதி-மொய்ம்பினோய்! 

 

கற்று உறுமாட்சி - நல்ல நூல்களைக் கற்று  அறிந்த  மாண்பு;
என்  கண்  இன்று  ஆயினும் - என்னிடம்  இல்லை என்றாலும்;
உற்று