பக்கம் எண் :

50யுத்த காண்டம் 

உறு பொருள்- ஆராய்ந்து மேலான பொருளை; தெரிந்து உணர்தல்
ஓயினும் 
-  தெரிந்துணர்ந்து    கொள்ளுதல்   இல்லையென்றாலும்;
சொற்றுறு சூழ்ச்சியின் - சிறப்பித்துப்  பேசப்படும் ஆராய்ச்சியின்;
துணிவு  சோரினும்
-  முடிவு தவறுமாயினும்; மொய்ம்பினோய் -
வலிமை  மிக்கவனே; முற்றுறக்  கேட்டபின்  முனிதி - என்னைக்
கோபிப்பதானாலுமே நான் கூறுவன யாவும் கேட்டபின் கோபி.
   

சோர்தல் - தவறுதல்.  ஓய்தல் - விடுபடுதல்  (இல்லையாதல்).
  

(74)
 

6145.

'கோநகர் முழுவதும், நினது கொற்றமும், 

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை 

ஆனவள் கற்பினால், வெந்தது அல்லது, "ஓர் 

வானரம் சுட்டது" என்று உணர்தல் மாட்சியோ?
 

கோநகர்  முழுவதும்  -  நமது தலைநகரமாகிய இலங்கை நகர்
முழுவதும்;நினது  கொற்றமும்  -  உன்னுடைய  வீர  வெற்றியும்;
சானகி  எனும்  பெயர் - சானகி என்ற பெயர் கொண்ட; உலகின்
தம்  அனை 
-  உலகத்தின்  தாயாகிய;ஆனவள்  கற்பினால் -
அந்தத்தேவியின்  கற்பினனலால்;  வெந்தது   அல்லது -  வெந்து
ஒழிந்ததே  அல்லாமல்;  ஓர்  வானரம்  சுட்டது -  ஒரு  குரங்கு
வந்து சுட்டது; என்று  உணர்தல்  மாட்சியோ- என்று நினைப்பது
அறிவுடைமை ஆகுமோ?
  

கோநகர் - தலைநகரம். தம்மனை - தாய்.
 

(75)
 

6146.

'எண்பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால், 

விண்பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும், 

பெண்பொருட்டு அன்றியும், பிறிது உண்டாம்எனின், 

மண்பொருட்டு அன்றியும், வரவும் வல்லவோ?*
 

எவரும் எண் பொருட்டு ஒன்றி நின்று - யாரும் எண்ணும்
பொருட்டாக  மனம்  ஒன்றி  நின்று;எண்ணினால் - சிந்தித்தால்,
விண்  பொருட்டு  ஒன்றிய உயர்வும் மீட்சியும்
- வானளாவ
வளர்ந்த  உயர்வும்  தாழ்வும்;   பெண்   பொருட்டு  - பெண்
காரணமாகவோ;அன்றியும் பிறிது உண்டாம் எனின் - அல்லது
வேறு  ஒரு  காரணம் உண்டு என்றால்; மண் பொருட்டு - மண்
காரணமாக   உண்டாகும்;  அன்றியும்  வரவும்  வல்லவோ -
இவையல்லாது வேறு காரணத்தால் வரலாகுமோ?