எண் - ஆய்வு. வல்லவோ - வல்லவையோ. ஒன்றிநின்று - ஒருமைப்பாட்டுன் நின்று. மீட்சி-தாழ்வு. |
(76) |
| 6147. | ' "மீனுடை நெடுங் கடல் இலங்கை வேந்தன்முன் |
| தானுடை நெடுந் தவம் தளர்ந்து சாய்வது, ஓர் |
| மானுட மடந்தையால்" என்னும் வாய்மொழி- |
| தேனுடை அலங்கலாய்!-இன்று தீர்ந்ததோ? |
| |
தேனுடை அலங்கலாய் - தேன் சிந்தும் மாலையை அணிந்த மன்னனே! மீனுடை நெடுங்கடல் - மீன் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட;இலங்கை வேந்தன் - இலங்கைக்கு அரசனான இராவணன்;முன் தான் உடை நெடுந்தவம் - முன் தனக்குண்டான தவபலம்;தளர்ந்து சாய்வது - தளர்ந்து கெடுவது; ஓர் மானுட மடந்தையால் - ஒரு மானிடப் பெண்ணால்;என்னும் வாய் மொழி - என்ற தவறாத சாப மொழி;இன்று தீர்ந்ததோ - இன்று நீங்கி விட்டதோ? இல்லையே! |
அலங்கல் - மாலை. வாய்மொழி - உண்மையான மொழி. இங்கே சாபத்தைக் குறித்தது. |
(77) |
| 6148. | 'ஏறிய நெடுந் தவம் இழைத்த எல்லை நாள், |
| ஆறிய பெருங் குணத்து அறிவன் ஆணையால், |
| கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை; |
| வேறு இனி அவர்வயின் வென்றி யாவதோ? |
| |
ஏறிய நெடுந்தவம் - நீ உயர்ந்த பெரிய தவத்தை; இழைத்த எல்லை நாள் - செய்த காலமாகிய அந்த நாள்; ஆறிய பெருங்குணத்து அறிவன் - அமைதியான சிறந்த குணத்தை உடைய பிரம தேவன்;ஆணையால் - கட்டளையினால்; கூறிய மனிதர்பால் - கூறப்பட்ட மனிதர்களிடம்; கொற்றம் கொள்ளலை - வெற்றிக்கு வரம் கேட்டுப்பெற வில்லை; வேறு இனி அவர் வயின் - இனி அந்த மானிடர்கள் பால்;வென்றி ஆவதோ - வெற்றியடைய முடியுமோ? |
ஆறிய - ஆன்றவிந்தடங்கிய. அறிவன் - கடவுளாகிய பிரமன். |
(78) |
| 6149. | 'ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ? |
| நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய்; |