| ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை |
| மேயினைஆம்; இனி, விளம்ப வேண்டுமோ? |
| |
ஏயது - (நீ மனிதரிடம் தோல்வி அடைய) நேர்ந்தது என்பதனை; பிறிது உணர்ந்து - வேறு காரணங்களை ஆராய்ந்துணர்ந்து;இயம்ப வேண்டுமோ - கூற வேண்டுமோ? நீ ஒரு தனி - நீ ஒப்பற்ற தனித்தலைவனாக (ஒருவனாக); உலகு ஏழும் நீந்தினாய் - ஏழுலகத்தையும் வென்றாய் (ஆனால்); ஆயிரம் தோளவற்கு - ஆயிரம் தோள்களை உடைய கார்த்த வீரியன் என்ற மானிட மன்னனுக்கு; தோற்றனை - தோற்று விட்டவனாய்;மேயினை ஆம் - ஆனாய் அல்லவா; இனி விளம்ப வேண்டுமோ - (மனிதருக்குத் தோற்பதை) இனிக் கூறவும் வேண்டுமோ? |
ஏயது - நேர்ந்தது, பொருந்தியது. ஒருதனி - தன்னந்தனி. நீந்துதல் -கடத்தல் (இங்கு வெல்லுதல்). நீ மனிதர்களிடம் தோல்வி அடைவாய் என்பதற்கு கார்த்த வீரியனிடம் தோற்றதே சான்று என்பது குறிப்பு. |
(79) |
| 6150. | 'மேல் உயர் கயிலையை எடுத்த மேலைநாள், |
| நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால், |
| கூல வான் குரங்கினால் குறுகும், கோள்; அது |
| வாலிபால் கண்டனம்-வரம்பு இல் ஆற்றலாய்! |
| |
வரம்பில் ஆற்றலாய் - எல்லையில்லாத வல்லமை உடையவனே! மேல் உயர் கயிலையை - நீ, ஓங்கி, உயர்ந்த கைலாய மலையை; எடுத்த மேலை நாள் - பேர்த்து எடுத்த அந்த நாளிலே; நாலு தோள் நந்தி - நான்கு தோள்களை உடைய நந்தி தேவன்; தான் நவின்ற சாபத்தால் - தான் கூறிய சாபத்தினாலே;கூல வான் குரங்கினால் - வாலுள்ள பெரிய குரங்கினால்; குறுகும் கோள் - தீங்கு நேரும்; அது வாலி பால் கண்டனம் - என்ற அதனை வாலியிடம் பார்த்தோமே. |
கூலம் - வால். வான் - பெரிய. கோள் - தீமை. இராவணன் கைலாயத்தைப் பேர்த்து எடுக்க முற்பட்ட போது, நந்திதேவன் வந்து தடுக்க, அவரைக் 'குரங்கு போன்ற முகத்தை உடையவன்' என இராவணன் பரிகசித்ததால் சினம் கொண்ட நந்தி தேவன் "குரங்குகளால் உனக்கு அழிவு நேரும்" எனச் சபித்தார். இந்தச் செய்தி உத்தரகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது. வாலியினிடம் இராவணன் |