தோற்றது. அச்சாபத்தை நிறைவேற்றிவிட்டது என்பதை நினைவுபடுத்தி வீடணன் இராவணனைத் தெருட்டுகிறான். |
(80) |
| 6151. | 'தீயிடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள் |
| வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ? |
| "நோய் உனக்கு யான்" என நுவன்றுளாள் அவள்; |
| ஆயவள் சீதை, பண்டு அமுதின் தோன்றினாள். |
| |
தீயிடைக் குளித்த - நெருப்பிலே மூழ்கி உயிர்துறந்த; அத்தெய்வக் கற்பினாள் - அந்த தெய்வீகக் கற்புடைய வேதவதி; வாயிடை மொழிந்த சொல் - வாயால் கூறிய சாபமொழிகள்; மறுக்க வல்லமோ - மறுக்கும் வல்லமை உடையேமோ? உனக்கு நான் நோய் - 'நான் உனக்கு நோயாவேன்';என நுவன்றுளாள் - என்று கூறியுள்ளாள்; அவள் ஆயவள் சீதை - அவளேதான் சீதை; பண்டு அமுதில் தோன்றினாள் - முன்பு பாற்கடலில் அமுதுடன் அவதரித்த இலக்குமியும் அவளே. |
தவவாழ்வை மேற்கொண்டு, தனித்து வாழ்ந்த வேதவதியை இராவணன் திக்கு விஜயத்தின் போது பலாத்காரம் செய்ய, 'நான் உனக்கு நோயாவேன்' என்று கூறி யாகத் தீயில் விழுந்து உயிர் துறந்தாள். அந்த வேதவதியே சீதை; திருமகளின் அவதாரம். இந்த வரலாறு உத்தர காண்டத்தில் பேசப்படும். |
(81) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
| 6152. | சம்பரப் பெயருடைத் தானவர்க்கு |
| இறைவனைத் தனு வலத்தால், |
| அம்பரத்து உம்பர் புக்கு, அமரிடைத் |
| தலை துமித்து, அமரர் உய்ய, |
| உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து |
| உதவினான்-ஒருவன், நேமி |
| இம்பரில் பணி செய, தசரதப் |
| பெயரினான், இசை வளர்த்தான்; |
| |
தசரதப் பெயரினான் ஒருவன் - தயரதன் என்னும் பெயருடைய ஒரு மன்னன்; நேமி இம்பரில் பணி செய - தனது ஆணை இவ்வுலகம் முழுதும் ஆட்சி புரியும் படியாக; சம்பரப் பெயருடை - சம்பராசுரன் என்ற பெயர் உடைய; தானவர்க்கு இறைவனை - அசுரர் குலத்து அரசனை;தனு வலத்தால் - தனது |