பக்கம் எண் :

54யுத்த காண்டம் 

வில்லின்  வலிமையால்;அம்பரத்து உம்பர் புக்கு - விண்வழியே
வானுலகு  சென்று; அமரிடைத் தலை துமித்து - தேவர்களைத்
துன்புறுத்திய  அவ்வரக்கனுடன்  போரிட்டு  அவன்  தலையைத்
துண்டித்து; அமரர்  உய்ய - தேவர்கள் உய்யுமாறு; உம்பருக்கு
இறைவனுக்கு
- தேவர்களுக்கு மன்னனான இந்திரனுக்கு; அரசு
அளித்து  
-   (சம்பரனிடமிருந்து   மீட்ட   விண்ணுலகத்தின்)
ஆட்சியைத்  தந்து;  உதவினான்   -   தேவர்களுக்கு   உதவி
செய்தான்;இசை வளர்த்தான் - அதனால் பெரும் புகழ் பெற்றான்.
  

அம்பரம் -விண். துமித்து -துண்டித்து. நேமி -ஆணை. இந்தச்
செய்தி  கையடைப்  படலம்  9ம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது
காண்க.  ஐந்து  சீராகப்பிரித்துக் கலித்துறையாகவும் இது முதலாக
6168 ஆம் பாடல் வரையுள்ளவற்றைக் கொள்ளவும் கூடும்.
  

(82)
 

6153.

'மிடல் படைத்து, ஒருவனாய், அமரர் கோன் 

விடையதா வெரிநின் மேலாய், 

உடல் படைத்து அவுணர் ஆயினர 

எலாம் மடிய, வாள் உருவினானும், 

அடல் படைத்து, அவனியை, 

"பெரு வளம் தருக !" என்று அருளினானும், 

கடல் படைத்தவரொடும், கங்கை 

தந்தவன் வழிக் கடவுள் மன்னன், 

 

மிடல்  படைத்து  -  (அந்தத்  தயரதன்)  மிகுந்த வலிமை
கொண்டு;ஒருவனாய் - தனக்கெவரும் ஒப்பில்லாத ஒருவனாகவே;
அமரர் கோன் விடையதா - தேவேந்திரனே காளையாக; வெரி
நின்  மேலாய் 
-  அக்காளையின்  முதுகின்  மேல்  அமர்ந்து;
உடல்  படைத்து -  மாறுபாடு  கொண்டு  (அரக்கருடன்  பகை
கொண்டு);அவுணர் ஆயினர் எலாம் மடிய -   அரக்கர்களான
எல்லோரும்  செத்தொழிய;  வாள்  உருவினானும்  -  வாளை
உருவிப்  போரிட்டவனான   ககுத்தனும்;  அவனியை   அடல்
படைத்து
-   உலகத்தை எல்லாம் வென்று;பெருவளம் தருக -
நிறை வளம் தருக; என்று   அருளினானும்  -   என்று  கூறி
உலகமக்களுக்கு   அருள்  செய்து உதவிய   பிருதுவும்;கடல்
படைத்தவரொடும்
- கடலை  உண்டாக்கிய   சகரர்களுடனே;
கங்கை  தந்தவன் 
- கங்கையை  மண்ணுலகுக்குக் கொண்டு
வந்த பகீரதனும்;  வழிக்  கடவுள்  மன்னன் -   தோன்றிய
குலத்திலே பிறந்த தெய்வத்தன்மை உடைய மன்னனாவான்.