பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 55

மிடல் - வலிமை. அமரர்கோன் -தேவேந்திரன். விடை-காளை.
வெரிந்-முதுகு. உடல்-மாறுபாடு. அவுணர் மடிய வாள் உருவியவன்
ககுத்தன்;   அவனியை   வளம்  தரச்  செய்தவன்  பிருது. கடல்
படைத்தவர்  சகரர்;   கங்கையைக்   கொணர்ந்தவன்   பகீரதன்.
இவர்களெல்லாம் பிறந்த சூரியகுலத்தில் பிறந்தவன்தான்  தசரதன்.
தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்றால், மானிடர்களைக் குறைவாக
மதிப்பிடலாமோ என்று எடுத்துக் கூறினான்.
 

(83)
 

6154.

'பொய் உரைத்து உலகினில் சினவினார் 

குலம் அறப் பொருது, தன் வேல் 

நெய் உரைத்து, உறையில் இட்டு, 

அறம் வளர்த்து, ஒருவனாய் நெறியில் நின்றான், 

மை உரைத்து உலவு கண் மனைவிபால் 

வரம் அளித்து, அவை மறாதே, 

மெய் உரைத்து, உயிர் கொடுத்து, 

அமரரும் பெறுகிலா வீடு பெற்றான். 

 

பொய் உரைத்து -  பொய்   கூறி வாழ்ந்தும்;  உலகினில்
சினவினார்   குலம் 
-   உலகிலே   சினந்து  எழுந்து தீமை
செய்பவரும்   ஆகிய   அரக்ககுலத்தினர்;   அறப்பொருது -
அடியோடு   அழியும்படி போர் செய்து;  தன்   வேல்  நெய்
உரைத்து
- தனது வேலுக்கு நெய் பூசி;  உறையில்  இட்டு -
உறையில் இட்டு வைத்து;  அறம் வளர்த்து -   அறநெறிகளை
விரும்பி   வளர்த்து;   ஒருவனாய்   நெறியில்  நின்றான் -
ஒப்பற்றவனாய் ஒழுக்க  நெறியிலே   நிலைத்து நின்றவன்; மை
உரைத்து உலவு கண்
- மை பூசப்பட்ட அசைகின்ற கண்ணை
உடைய;  மனைவி   பால்வரம்   அளித்து -  மனைவியான
கைகேயிக்கு இரண்டு வரங்களைக்  கொடுத்து;   அவை மறாது
மெய் உரைத்து
- அவற்றை மறுக்காமல் உண்மையை உரைத்து;
உயிர் கொடுத்து
- உயிரையும் தந்து; அமரரும் பெறுகிலா -
தேவர்களும் அடைய இயலாத; வீடு  பெற்றான்  -  பேரின்ப
வீடான பரமபதத்தை அடைந்தான் (அந்தத் தயரதனாவான்).
  

'உரைத்து' என்பது  'பொய் உரைத்து' எனப் பேசி என்ற
பொருளிலும்   'நெய்   உரைத்து'   என்பதில்  பூசி   என்ற
பொருளிலும்   'மை   உரைத்து'   என்பதில்   தீட்டி என்ற 
பொருளிலும்   வந்தது.   சினவுதல் - சினந்தெழுதல். பொய்
உரைத்தலும்,   சினந்தெழுதலும்  அரக்கருக்குரிய  தாதலின் 
'குலம்' என்பதற்கு அரக்க குலம் என்று