பொருள் கொள்ளப்பட்டது. பிறழும் தன்மை உடைய கண்களை 'உலவு கண்' என்றார். |
(84) |
| 6155. | 'அனையவன் சிறுவர், எம் பெரும! |
| உன் பகைஞரானவரை அம்மா |
| இனையர் என்று உணர்தியேல், |
| இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்; |
| முனைவரும் அமரரும், முழுது |
| உணர்ந்தவர்களும், முற்றும் மற்றும், |
| நினைவு அருந் தகையர்; நம் வினையினால் |
| மனிதர் ஆய், எளிது நின்றார். |
| |
எம்பெரும - எங்கள் தலைவனே!அனையவன் சிறுவர்- அத்தகைய தயரதனது புதல்வர்கள்; உன் பகைஞர் ஆனவரை- உனக்கு பகைஞர் ஆயினர் அவர்களை; இனையர் என்று உணர்தியேல் - இத்தன்மை உடையவர்கள் என்பதை அறிய விரும்புவையேல்; இருவரும் ஒருவரும் எதிரிலாதார் - இராமன், இலக்குவன் ஆகிய இருவரும் ஒப்பாக எவருமில்லாதவர்; முனைவரும் அமரரும் - முனிவர்களும் தேவர்களும்; முழுதுணர்ந்தவர்களும் - முழுதும் உணர்ந்த ஞானிகளும்;முற்றும் மற்றும் - மற்றுமுள்ள உயிர்கள் எல்லாமும்; நினைவு அரும் தகையர் - நினைக்கவும் அரிய தன்மையர்; நம் வினையினால் மனிதராய் - நாம் செய்த தீவினையால் மனிதர்களாகி; எளிது நின்றார் - எளிதில் காண வந்து நின்றார்கள். |
வீடணன் இராவணனிடம் கொண்ட பெருமதிப்பால் அவரை 'எம்பெரும' என அழைத்தான். தசரத புத்திரர்களை இத்தகையர் என உணர்தல் அரிது என்பதனால் "அம்மா" என வியந்துரைத்தான். 'ஒருவரும் எதிரிலாதார்' ஒப்பாரும் மிக்காருமில்லாதவர் என்பது கருத்து. |
(85) |
| 6156. | 'கோசிகப் பெயருடைக் குல முனித் தலைவன், |
| "அக் குளிர் மலர்ப் பேர் |
| ஆசனத்தவனொடு எவ் உலகமும் |
| தருவென்" என்று அமையலுற்றான், |
| ஈசனின் பெறு படைக்கலம், |
| இமைப்பு அளவில் எவ் உலகில் யாவும் |