பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 57

நாசம் உற்றிட நடப்பன, 

கொடுத்தன பிடித்துடையர்-நம்ப! 

 

நம்ப    -       விருப்பத்துக்குரியவனே!      அக்குளிர் 
மலர்ப்பேராசனத்தவனொடு
- அந்தக் குளிர்ந்த தாமரை மலரை
ஆசனமாக உடைய பிரமனோடு;எவ்வுலகமும் தருவென்- எல்லா
உலகங்களையும் படைப்பேன்;என்று அமையலுற்றான் கோசிதப்
பெயருடைக் குலமுனித்தலைவன்
-  என்று தொடங்கியவனாய
கோசிகன் என்ற பெயருடைய முனிவர் தலைவன் விசுவாமித்திரன்;
ஈசனின் பெறு படைக்கலம்
- சிவபிரானிடம் பெற்ற ஆயுதங்கள்;
இமைப்பளவில்
- கண்ணிமைக்கும்   நேரத்தில்;   எவ்வுலகில்
யாவும்
- எவ்வுலகிலும் வாழும் எல்லாவற்றையும்; நாசம் உற்றிட
நடப்பன
- நாசம் செய்யும்படி   செல்வனவும்;  கொடுத்தன -
கொடுத்தனவும்       ஆகியவற்றை;       பிடித்துடையர் -
கைக்கொண்டுள்ளனர்.
  

பிரமதேவன்   போலவே   எல்லா   உலகங்களையும் எனது
தவபலத்தால்  இப்போதே   படைப்பேன்'   எனத்  தொடங்கிய
ஆற்றலுள்ளவர்  விசுவாமித்திரர்.   நம்பன் - விரும்பத்தக்கவன்.
கோசிகன் -விசுவாமித்திரனின் மற்றொரு பெயர்.  விசுவாமித்திரர்
திரிசங்கு  மன்னனுக்காக எல்லா  உலகங்களையும்   படைக்கத்
தொடங்கியது.  இராம  இலக்குவர்களுக்கு ஆயுதம் வழங்கியது
ஆகிய செய்திகள் பாலகாண்டத்துள் கூறப்பட்டுள்ளன.
  

(86)
 

6157.

'எறும் வலிப் பொரு இல் தோள் அவுணரோடு 

அமரர், பண்டு, இகல் செய் காலத்து, 

உறு திறல் கலுழன்மேல் ஒருவன் நின்று 

அமர் செய்தானுடைய வில்லும், 

தெறு சினத்தவர்கள் முப்புரம் 

நெருப்புற உருத்து எய்த அம்பும், 

குறுமுனிப் பெயரினான், நிறை தவர்க்கு 

இறை, தரக் கொண்டு நின்றார். 

 

எறுழ் வலிப் பொருவில் தோள் - மிகுந்த வலிமை உடைய
நிரற்ற   தோளாற்றலும் உள்ள;  அவுணரோடு  - அசுரர்களுடன்;
அமரர் பண்டு இகல் செய்காலத்து - முன்பு  தேவர்கள் போர்
செய்த காலத்திலே;  உறுதிறல்  கலுழன் மேல் - மிக்க வலிமை
உடைய   கருடன்   மேல்   அமர்ந்து;  ஒருவன் நின்று அமர்
செய்தானுடைய   வில்லும்
- ஒருவனாக எதிர்த்து நின்று போர்
செய்த திருமாலின்