வில்லும்; தெறு சினத்தவர்கள் - எவரையும் அழிக்கும் வன்மையும் சினமும் உடைய அரக்கர்கள் வாழும்; முப்புரம் நெருப்பு உருத்து எய்த அம்பும் - திரிபுரம் தீப்பற்றி அழிய, சிவபெருமான் சினந்தெய்த அம்பும்; குறுமுனிப் பெயரினான் - அகத்தியர் என்ற பெயர் கொண்ட முனிவரும்; நிறை தவர்க்கு இறை தர - நிறைந்த தவத்தை உடைய முனிவர்களுக்கெல்லாம் தலைவருமானவர் தர;கொண்டு நின்றார் - அவற்றைப் பெற்றுக் கொண்ட சிறப்புடையவர்கள். |
எறுழ்வலி-மிக்க வலிமை. கலுழன்-கருடன். குறுமுனி-அகத்தியர். அகத்தியர் இராமனுக்கு வில்லும் அம்பும் கொடுத்த செய்தி, ஆரண்ய காண்டம் அகத்தியப் படலத்துள் கூறப்பட்டுள்ளது. |
(87) |
| 6158. | 'நாவினால் உலகை நக்கிடுவ; திக்கு |
| அளவிடற்கு உரிய; நாளும், |
| மேவு தீ விடம் உயிர்ப்பன; வெயில் |
| பொழி எயிற்றன; அவ் வீரர் |
| ஆவம்ஆம் அரிய புற்று உறைவ;- |
| முற்று அறிவருக்கு அழிவு செய்யும் |
| பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது, |
| இரை பெறா-பகழி நாகம். |
| |
பகழிநாகம் - இராமனிடமுள்ள அம்புகளாகிய நாகங்கள்; நாவினால் உலகை நக்கிடுவ - நாவால் உலகை எல்லாம் நக்கும் திறனுடையன;திக்கு அளவிடற்குரிய - திசைகளை அளவிடுவதற்கு உரியன; நாளும் மேவு தீவிடம் உயிர்ப்பன - நாள்தோறும் பொருந்திய தீய விஷத்தை வெளிவிடுவன; வெயில் பொழி எயிற்றன - ஒளியை உமிழும் பற்களை உடையன; அவ்வீரர் ஆவமாம் அரியபுற்று உறைவன - அந்த வீரர்களாகிய இராம இலக்குவர்களின் அம்புக் கூடாகிய புற்றிலே தங்கி இருப்பன; முற்று அறிவருக்கு - முற்றுணர்ந்த மெய்யறிவினராகிய முனிவர்களுக்கு; அழிவு செய்யும் பாவ காரியர் - தீமை விளைவிக்கும் பாவிகளின்;உயிர்ப்பதம் அலாது - உயிராகிய உணவை அல்லாது; இரை பெறா - வேறு இரையைப் பெறாதனவாம். |
பகழிநாகம்-பகழியை நாகமாக உருவகித்தார். அதற்கேற்ப நாகத்தின் செயல்களாக நக்குதல்-விடமுயிர்த்தல் புற்றுறைதல் ஆகிய |