பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 59

செயல்களைக்   கூறுவதால்   முற்றுருவகம்   ஆகும்.  ஆவம் -
அம்பறாத்தூணி.   இதனை அரிய புற்று என்றார், பதம் -  உணவு
பாவகாரியர்-பாவம் செய்பவர்கள் (தீயவர்). வெயில்-ஒளி அம்பைப்
பாம்பாக உருவகம் செய்ததற்கேற்ப நாக்கும், பல்லும் கூறப்பட்டன.
உலகை நக்கிடுவ-உலகத்தையே நாவினால் நக்கிக் கொல்லவல்லன.
 

(88)
 

6159.

'பேருமோ ஒருவரால், அவர்களால் 

அல்லது? இவ் பெரியவேனும், 

நாரும் மூரியும் அறா; நம்முடைச் 

சிலைகள்போல் நலிவ ஆமோ? 

தாருவோ, வேணுவோ, தாணுவாய் 

உலகினைத் தழுவி நிற்கும் 

மேருவோ, மால் வரைக் குலம் எலாம் 

அல்லவோ, வில்லும் மன்னோ? 

 

வில்லும் -  அவர்கள் கைக்கொண்ட விற்களும்;  தாருவோ
வேணுவோ
- மரமோ, மூங்கிலோ (அல்ல);தாணுவாய் உலகினைத்
தழுவி நிற்கும் 
-  தூணாக   உலகத்தையே  தாங்கி  நிற்கின்ற;
மேருவோ    மால்வரைக்   குலமெலாம்   அல்லவோ  -
மேருமலையோ     அல்ல     பெரிய     மலைகளையெல்லாம்
சேர்த்தமைத்தன   அல்லவோ?  இவ்அவர்களால்  அல்லது -
இந்த வீரர்களான இராம.  இலக்குவர்களை அல்லது; ஒருவரால்
பேருமோ
-  வேறு ஒருவரால் அசைக்க   இயலுமோ? நாரும்
மூரியும் அறா
- நாணும் வலிமையும் நீங்காதன;பெரிய வேனும்
- (நமது விற்கள்)  உருவத்தில்  பெரியனவாயினும்;  நம்முடைச்
சிலைகள் போல் நலிவ ஆமோ
-  நம்முடைய   விற்களைப்
போல (அவை) நலிவன ஆமோ? 
 

'வில்' உகரச் சாரியை பெற்று 'வில்லு" என வந்தது.
 

(89)
 

6160.

'உரம் ஒருங்கியது, நீர் கடையும்

வாலியது மார்பு; உலகை மூடும்

மரம் ஒருங்கிய; கராதியர், விராதனது

மால் வரைகள் மானும்

சிரம் ஒருங்கின; இனிச் செரு

ஒருங்கின-இனி, தேவர் என்பார்

பரம் ஒருங்குவது அலால், பிறிது

ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ?