பக்கம் எண் :

60யுத்த காண்டம் 

நீர் கடையும் வாலியது மார்பு - (இராமன் ஏவிய அம்பால்)
பாற்கடலை  ஒருவனாகவே   கடைந்த  வாலியின் மார்பு;  உரம்
ஒடுங்கியது
- வலிமை ஒடுங்கிப் போயிற்று;உலகை மூடும் மரம்
ஒடுங்கிய
-   உலகை  மூடுமளவுக்கு ஓங்கி வளர்ந்தமராமரங்கள்
ஒடுங்கின;   கராதியர் விராதனது - கரன் முதலியோருடையவும்
விராதனுடையதுமான; மால் வரைகள் மானும் சிரம் ஒருங்கின-
பெரிய   மலைகளை   ஒத்ததலைகள்  ஒடுங்கின;  இனிச் செரு
ஒடுங்கின
- இனி அசுரர் போர் செய்வது ஒடுங்கின;இனி தேவர்
என்பார்
-   இனி, தேவர்கள் என்போரிடம்;பரம் ஒருங்குவது
அலால்
- நமது சுமை ஒடுங்குவதல்லாது;பிறிது ஒருங்காததோர்
பகையும்  உண்டோ  
-   வேறு   அவர்களுக்கு  ஒடுங்காத
பகைவர்களும் உண்டோ?
 

நீர் - இங்கே  பாற்கடலைக்   குறிக்கும்.  கராதியர் -கரன்
முதலானோர். மானும்-ஒக்கும். பரம்-சுமை. அலால் - அல்லால்
என்பதன் இடைக்குறை. ஒருங்குதல்-ஒடுங்குதல், அழிதல் என்ற
பொருள் தந்து நின்றது.
 

(90)
 

6161.

'சொல் வரம் பெரிய மா முனிவர்

என்பவர்கள், தம் துணை இலாதார்,

"எல் வரம் பெரிய தோள் இருவரே

தமரொடும் உலகம் யாவும்

வெல்வர்" என்பது தெரிந்து, எண்ணினார்,

"நிருதர் வேர் முதலும் வீயக்

கொல்வர்" என்று உணர்தலால், அவரை

வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார்.

 

சொல்வரம் பெரிய - எவரும் வியந்து கூறும் வரபலம் மிக்க;
மாமுனிவர்   என்பவர்கள் -   சிறந்த முனிவர்கள்   என்போர்;
தம் துணையிலாதார் - தமக்கு வரும் துன்பங்களைப்   போக்கும்
துணைவர் இல்லாதவராய்;  எல்   வரம்  பெரியதோர் - சிறந்த
வரபலம் பெற்ற பெரிய தோள்களையுடைய;இருவரே - இராமனும்
இலக்குவனுமாகிய இருவர் மட்டுமே;தமரொடும் உலகம் யாவும்
வெல்வர்
-  தமரோடு   உலகனைத்தும்  வெல்ல வல்லவராவர்;
என்பது   தெரிந்து  -  என்பதைத்  தெரிந்து   கொண்டதால்;
எண்ணினார் - நினைத்துப் பார்த்தவர்கள்; நிருதர் வேர் முதலும்
வீயக் கொல்வர்
- அரக்கர்கள் அடியோடு அழிந்து