பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 61

படுமாறு  கொல்வார்கள்;   என்று  உணர்தலால் -    என்று
அறிந்துணர்வதால்; அவரை வந்து அணைவதோர் -   அந்த
வீரர்களைத்   துணையாகக்கொண்டு   அடைவதற்காக   ஒரு;
இயைபு கொண்டார்
- தொடர்பு கொண்டார்கள்.
 

சொல்வரம்-வியந்து கூறும் வரபலம்.
 

(91)
 

6162.

'துஞ்சுகின்றிலர்களால், இரவும் நன்

பகலும், நிற் சொல்ல ஒல்கி,

நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்;

"பேர் சனகி ஆம் நெடியது ஆய

நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார்

நரகம்" என்று எண்ணி, நம்மை

அஞ்சுகின்றிலர்கள்-நின் அருள் அலால்,

சரண் இலா அமரர் அம்மா!

 

பேர் சனகியாம் நெடியதாய நஞ்சு - சானகி என்ற பெயரை
உடைய    கொடிய    விடத்தை;    தின்றனர்கள்   தாம்   -
தின்றவர்களான இவ்வரக்கர்;நரகம் நண்ணுவார் - (இறந்து) நரகம்
அடைவார்கள்;என்று எண்ணி - என்று நினைத்து;நின்  அருள்
அலால்  சரண்   இலா  அமரர்
-  இதுகாறும் உனது அருளை
அல்லாது வேறு புகலிடம் இல்லாத தேவர்கள்; அஞ்சுகின்றிலர்கள்
- நமக்கு  அஞ்சாதவராயினர்;  நிற்சொல்ல   ஒல்கி  -  இதனை
உனக்குக்  கூற அஞ்சி;   நெஞ்சு நின்று அயரும் இந்நிருதர் -
மனம்   மயங்கி நின்று வருந்தும் இந்த அரக்கர்கள்;  இரவும் நன்
பகலும்
- இரவும் பகலுமாகிய  எப்போதும்;துஞ்சுகின்றிலர்கள் -
உறங்காதவராய் உள்ளனர்.
 

துஞ்சுதல்-தூங்குதல்.  ஒல்கி-பயந்து. அயரும்-மயங்கும்
(சோரும்) சனகி என்னும் பெரு நஞ்சு (9921) என்று பின்பும்
கூறுவான்.
 

(92)
 

6163.

'புகல் மதித்து உணர்கிலாமையின், நமக்கு

எளிமை சால் பொறைமை கூர,

நகல் மதிக்கில மறுப் பொலிய

வாள் ஒளி இழந்து, உதயம் நண்ணும்

பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம்,

இரவு கால் பருவ நாளின்