பக்கம் எண் :

62யுத்த காண்டம் 

அகல் மதிக்கு உவமை ஆயின

தபோதனர் உளார் வதனம் அம்மா?

 

தபோதனர்     உளார்வதனம்    -   தவச்செல்வர்களான
முனிவர்களது முகங்களெல்லாம்;புகல்மதித்து உணர்கிலாமையின்
-   முன்பு,    தங்களுக்குப்   பாதுகாப்பு    எதுவென   மதித்து
அறியாமையால்;    நமக்கு    எளிமை     சால்  -   நமக்கு
எளியவர்களாகவும்;பொறைமை  கூர  -    மிகுந்த  பொறுமை
உள்ளவர்களாகவும்;    நகல்     மதிக்கில    -    மகிழ்ச்சி
இல்லாதவர்களாகவும்;மறுப்பொலிய வாள் ஒளி இழந்து - கறை
விளங்க,  நல்ல  ஒளியை  இழந்து;உதயம் நண்ணும் - சூரியன்
உதித்தபின் காணப்படும்;பகல் மதிக்கு உவமையாம் - பகலில்
தோன்றும்    மதியை    ஒத்துக்  காணப்பட்டன;விபுதராம் -
தவமுனிவர்களாகிய அவர்கள்   (முகங்கள்); இரவு கால் பருவ
நாளின்
- இரவுக்காலத்தில்  பௌணர்மியில் தோன்றும்; அகல்
மதிக்கு உவமை ஆயின
- முழு மதிக்கு உவமை ஆயின.
 

புகல்-பாதுகாப்பான   இடம். நகல் - மகிழ்ச்சி.  பருவ
காலம்-பௌர்ணமி நாள். வதனம்-முகம். தபோதனர்; விபுதர்
-முனிவர்கள்.
 

(93)
 

6164.

'சிந்து முந்து உலகினுக்கு இறுதி புக்கு,

உரு ஒளித்து, உலைதல் செய்வார்,-

இந்துவின் திரு முகத்து இறைவி

நம் உறையுளாள் என்றலோடும்,-

அந்தகன் முதலினோர், அமரரும்

முனிவரும் பிறரும், அஞ்சார்

வந்து, தம் உலகமும் வானமும்

கண்டு உவந்து, அகல்வர் மன்னோ.

 

சிந்து முந்து உலகினுக்கு - (நமக்குப் பயந்து) கடல் பொங்கி
எழும் இந்த உலகத்துக்கு அப்பால்;இறுதி புக்கு -  முடிவிடமான
கடைசியில் சென்று;உரு ஒளித்து - தங்கள்  வடிவத்தை  ஒளித்து,
வேற்றுருவத்தில்   வாழ்ந்து;   உலைதல்  செய்வார் - வருந்தித்
தவித்தவர்கள்;    இந்துவின்     திருமுகத்து     இறைவி -
மதியைப்போன்ற     திருமுகத்தை    உடைய    தெய்வமகளான
சீதாபிராட்டி;   நம்   உறையுளாள் -   நமது   உறைவிடமான
இலங்கையில் இருக்கிறாள்;என்றலோடும் - என்று தெரிந்தவுடன்;
அந்தகன் முதலினோர்
-  எமன் முதலானவர்களும்; அமரரும்
முனிவரும்
- தேவர்களும்,