முனிவர்களும்; பிறரும் - மற்றுமுள்ளவர்களும் (கின்னரர் முதலானோர்); அஞ்சார் - அச்சமில்லாதவர்களாக; வந்து தம் உலகமும் வானமும் கண்டு - வந்து, தங்கள் விண்ணுலகத்தையும் வானத்தையும் பார்த்து விட்டு; உவந்து அகல்வர் - மகிழ்ந்து செல்வதாயினர். |
சிந்து-கடல். முந்துதல்-பொங்குதல். இந்து-சந்திரன். அந்தகன்- எமன். பிறர் கின்னரர் முதலானோர். |
(94) |
| 6165. | 'சொலத் தகாத் துன்னிமித்தங்கள் |
| எங்கணும் வரத் தொடர்வ; ஒன்னார், |
| வெலத் தகா அமரரும் அவுணரும், |
| செருவில் விட்டன விடாத |
| குலத்த கால் வய நெடுங் குதிரையும், |
| அதிர் குரல் குன்றும், இன்று |
| வலத்த கால் முந்துறத் தந்து, நம் |
| மனையிடைப் புகுவ மன்னோ. |
| |
சொலத்தகாத்துன்னிமித்தங்கள் - சொல்லி முடியாத எத்தனையோ கெட்ட சகுனங்கள்;எங்கணும் வரத் தொடர்வ - எங்கும் தொடர்ந்து காணப்படுகின்றன;ஒன்னார் வெலத்தகா - பகைவர்களால் வெல்ல முடியாதவையான; விடாத குலத்தகால் வயநெடுங்குதிரையும் - நீங்காத சிறந்த குலப்பிறப்பை உடைய வலி சிறந்த நமது குதிரைகளும்; அதிர் குரல் குன்றும் - பகைவர் அஞ்சும்படி பிளிறும் குரல் வாய்ந்த மலை போன்ற நமது யானைகளும்; அமரரும் அவுணரும் - தேவர்களும் அரக்கர்களும்;செருவில் விட்டன - செய்த போரில் பங்கு கொண்ட அவை;நம்மனையிடை - நமது இல்லங்களிலே; வலத்தகால் முந்துறத் தந்து புகும் - வலது காலை முன்னே வைத்துப் புகுகின்றன. |
குலம்-நல்ல குடிப்பிறப்பு. வயம்-வலிமை. சொலத்தகா - வெலத்தகா என்பன சொல்லத்தகா, வெல்லத்தகா என்பதன் தொகுத்தல் விகாரம். யானையும், குதிரையும் வலக் காலை முன்னே தூக்கி வைத்து வீட்டுக்குள் புகுவது துர்நிமித்தம் என்பது உலக வழக்காகும். அடுத்தபாடல்களிலும் பல துன்னிமித்தங்கள் கூறப்படுகின்றன. |
(95) |
| 6166. | 'வாயினும் பல்லினும் புனல் வறந்து |
| உலறினார், நிருதர்; வைகும் |