| பேயினும் பெரிய பேம் நரிகளும் |
| புரிதரும்; பிறவும் எண்ணின், |
| கோயிலும் நகரமும், மட நலார் |
| குழலும், நம் குஞ்சியோடும், |
| தீயின் வெந்திடுமலால் ஒரு |
| நிமித்தம் பெறும் திறனும் உண்டோ? |
| |
நிருதர் வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் - அரக்கர்கள் வாயிலும் பல்லிலும் நீர் வறண்டு போய் பொலிவிழந்தனர்;வைகும் பேயினும் பெரிய பேம் நரிகளும் புரிதரும் - தங்கியிருக்கும் பேய்களும் அவற்றைவிடப் பெரியனவாகிய அச்சம் தரும் நரிகளும் பல்கிப் பெருகுகின்றன; பிறவும் எண்ணின் - வேறும் நினைப்போமாயின்; கோயிலும் நகரமும் - நமது அரண்மனையும், இலங்கைமாநகரமும்;மடநலார் குழலும் - இளம் பருவத்தினரான நமது மகளிரின் கூந்தலும்; நம் குஞ்சியோடும் - நமது தலைமுடியுடனே;தீயின் வெந்திடும் - நெருப்பிலே வெந்து கருகும்;அலால் ஒரு நிமித்தம் - இவையல்லாத ஒரு நல்ல நிமித்தம்; பெறும் திறனும் உண்டோ - பெறும் வகை நமக்குள்ளதோ? |
வறந்து - வற்றிப்போய். உலறினார் - உலர்ந்து பொலிவிழந்தார். கண்ணும் முகமும் உலறி (சீவக. 2996) கோயில்-அரண்மனை குஞ்சி-ஆண்கள் தலைமயிர். பேம்- அச்சம், மடம். இளமை. நல்லார் என்பது 'நலார்' என நின்றது தொகுத்தல் விகாரம். 'உண்டோ' ஓகாரம் எதிர்மறைப் பொருள் தந்து நின்றது; இல்லை என்பது பொருள். |
(96) |
| 6167. | 'சிந்த மா நாகரைச் செரு முருக்கிய |
| கரன், திரிசிரத்தோன், |
| முந்த மான் ஆயினான், வாலியே |
| முதலினோர் முடிவு கண்டால், |
| அந்த மான் இடவனோடு, ஆழி மா |
| வலவனும், பிறரும், ஐயா! |
| இந்த மானிடவராம் இருவரோடு |
| எண்ணல் ஆம் ஒருவர் யாரே? |
| |
ஐயா - தலைவனே! சிந்த மாநாகரைச் செருமுருக்கிய - சிறந்த தேவர்களை எல்லாம் சிதறும்படி போரில் வலிமை அழித்த; கரன், திரி சிரத்தோன் - கரனும் திரிசிரனும்;முந்த மான் ஆயினான் - முன்னே மாய மானாக வந்த மாரீசனும்; வாலியே |