முதலினோர் - கிட்கிந்தை மன்னனான வாலி முதலானவர்களும்; முடிவு கண்டால் - இராம லக்குவரால் இறந்தழிந்தார்கள் என்பதை அறிந்தால்;அந்த மான் இடவனோடு - மான் போன்ற உமையவளை இடப்புறத்தில் கொண்ட சிவபிரானும்; ஆழிமாவலவனும் - சக்கரப் படையை உடைய வல்லவரான திருமாலும்; இந்த மானிடவராம் - இந்த மனிதர்களாகிய; இருவரோடு - இராமன், இலக்குவன் என்ற இருவருடனே; எண்ணலாம் ஒருவர் யாரே- நிகராக எண்ணத் தகுந்த ஒருவர் யார் இருக்கிறார்கள்? |
நாகர்-தேவர்கள். சிந்த-சிதறியோட. செரு-போர். முருக்கிய- வலிமையை அழித்த மான். இடவன்-மானை இடக்கரத்தில் ஏந்திய சிவன் எனவும் கொள்ள இடமுண்டு. |
(97) |
| 6168. | 'இன்னம் ஒன்று உரை செய்தால்; |
| இனிது கேள், எம்பிரான்! இருவர் ஆய |
| அன்னவர் தம்மொடும் வானரத் |
| தலைவராய் அணுகி நின்றார், |
| மன்னும் நம் பகைஞர் ஆம் |
| வானுளோர்; அவரொடும் மாறுகோடல் |
| கன்மம் அன்று; இது நமக்கு உறுதி |
| என்று உணர்தலும், கருமம் அன்றால். |
| |
எம்பிரான்! - எமது தலைவனே!இன்னம் ஒன்று உரை செய்தால் - இன்னும் ஒன்று கூறுவதானால்;இனிது கேள் - அதனை இனிதே கேட்பாயாக; இருவராய அன்னவர் தம்மொடும் - இருவரான ராம, இலக்குவர்களோடும்; மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் - நிலைபெற்ற நமது பகைவர்களாகிய விண்ணுளோர்; வானரத் தலைவராய் அணுகி நின்றார் - வானரத் தலைவர்களாக நெருங்கி நின்றனர்; அவரொடு மாறுகோடல் - அவர்களோடு மாறுபாடு கொள்ளுதல்; கன்மம் அன்று - காரியம் ஆகாது; இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்று - இவ்வாறு பகைத்துக் கொள்ளுதல் உறுதி என உணர்வதும் செய்யத் தக்கதல்ல. |
தேவர்களே வானரர்களாக வந்தனர் என முன்னர் குறிக்கப்பட்டுள்ளது. (199) மாறுகோடல்-பகைத்துக் கொள்ளுதல். |
(98) |