கலித்துறை |
|
6169. |
'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் |
|
எஞ்ச, |
|
|
வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் |
|
மடியாது, | |
|
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; |
|
இதன்மேல் | |
|
விசையம் இல்' எனச் சொல்லினன்-அறிஞரின் |
|
மிக்கான். | |
| |
இசையும் செல்வமும் -
புகழும் செல்வமும்; உயர் குலத்து இயற்கையும் - உயர்ந்த நமது குல
இயல்பும்;எஞ்ச - தாழ்ந்து கெட; வசையும் கீழ்மையும் மீக்கொள
- பழியும் தாழ்வும் மேலோங்க; கிளையொடும் மடியாது - உற்றார்
உறவினரோடு அழியாது; அசைவு இல் கற்பின் அவ்வணங்கை - தளர்தல்
இல்லாத கற்பை உடைய தெய்வமகளான சீதையை; விட்டருளுதி - (இராமனிடம்
சேர) விட்டருள்வாயாக;இதன் மேல் விசையம் இல் - இவ்வாறு விடுவதை
விடச்சிறந்த வெற்றி வேறில்லை; எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்
- என்று அறிஞரில் எல்லாம் சிறந்தவனான வீடணன் கூறினான்; |
அறிஞரில்
மிக்கான்-அறிவாளிகளில் சிறந்தவன் (வீடணன்) அறிவுடையார் ஆவது அறிவார்
என்ற வள்ளுவர் கருத்தை நினைவு கூர்க. அசைவு + இல் + கற்பு-நிலை
தடுமாறாது கற்பு. விசையம் - வெற்றி. நாம் செய்ய வேண்டியது சீதா
பிராட்டியை இராமனிடம் செல்ல விடுவித்தலே. இதனால் நமக்குப் புகழ்
உண்டு. மேற்போக்காகப் பார்த்தால் சீதையை விட்டு விடுவது இழிவு போல்
தோன்றினும் இதைவிட வெற்றி வேறில்லை என்றதன் கருத்தை உன்னுக. இதைச்
செய்யத் தவறினால் பழியும், தாழ்வுமே மேலோங்கும். அத்துடன் நமது
சுற்றமெல்லாம் அழிந்து பட நேரிடும் என, இராவணனுக்கு வீடணன் எடுத்துக்
கூறினான் என்க. 'விட்டிடுக' என்னாது 'விட்டருளுதி' எனச் சொன்ன வாசகம்
கருதுக. மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்த தமையனிடத்து இன்னமும்
பாசமும் மரியாதையும் காட்டுகிறான் வீடணன். |
(99) |
இராவணன் வீடணனைக் கடிந்து பேசுதல் |
| 6170. |
கேட்ட ஆண்தகை
கரத்தொடு கரதலம் கிடைப்பப் |
|
பூட்டி, வாய்தொறும் பிறைக் குலம் வெண் நிலாப் |
|
பொழிய, |