பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 67

வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்

தோள் தடங்களும் குலுங்க, நக்கு, இவை இவை

சொன்னான்:

  

கேட்ட ஆண்தகை - வீடணன் கூறிய மொழிகளைக் கேட்ட
ஆண்மை   மிக்கவனாகிய   இராவணன்;  கரத்தொடு கரதலம்
கிடைப்பப்பூட்டி
-   கையோடு  கை   பொருந்த விரல்களைக்
கோத்துக்கொண்டு;வாய்தொறும் - பத்து   வாய்களிலும் உள்ள;
பிறைக்குலம் -  பிறைச்சந்திரனைப்  போன்ற பற்கள்;   வெண்
நிலாப் பொழிய
- வெள்ளிய நிலவொளியைப் பொழிய;  வாள்
தடம் தவழ் ஆரமும்
-  வாளால்   உளவாகிய   விழுப்புண்
தழும்பின்  மீது தவழும் மார்பும்;   வயங்கு ஒளி மார்பும் -
விளங்கும் ஒளியுடைய  மார்பும்; தோள் தடங்கலும் குலுங்க
நக்கு 
- தோள்களாகிய  மலைகளும் குலுங்கும் படி சிரித்து;
இவை இவை சொன்னான்
- பின்வருமாறு கூறலானான்.
 

கரதலம்  - கை.    இருபெயரொட்டுப்   பண்புத்தொகை.
பிறைக்குலம் -  பிறைச்சந்திரனைப் போன்ற கோரைப் பற்கள்.
ஆண்டகை -ஆண்மை மிக்கவன். நக்கான் - (கோபச் சிரிப்பு)
சிரித்தான்.   வாள்தடம்  -   போரிலே   வாள்கள்   பட்டு,
விழுப்புண்ணான   இடம்.  விழுப்புண் விளைத்த தழும்புகள்
ஆரம்   மறைத்தது.  குலுங்கி   சிரித்தபோது   தழும்புகள்
தெரிந்தன. பிறை உவமையாகுபெயராய்க் கோரைப்பற்களைக்
குறித்தது.
 

(100)
 

6171.

' "இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென்"

என்றாய்;

பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக்

கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை; குறித்தது,

அச்சமோ? அவர்க்கு அன்பினோ?

யாவதோ?-ஐயா!

 

ஐயா!  இச்சை அல்லன உறுதிகள் - நான் விரும்பத்தகாத
உறுதிகளை;  இசைக்குவென் என்றாய் - எனக்குச் சொல்வேன்
என்றாய்; பிச்சர்   சொல்லுவ  சொல்லினை  -   பித்தர்கள்
கூறுவதைக் கூறினாய்;என் பெரு விறலை - எனது பேராற்றலை;
கொச்சை மானிடர் -   அற்பமான  மனிதர்கள்; வெல்குவர்
என்றனை 
-   வெல்லுவார்கள் என்று கூறினாய்;குறித்தது -
இவ்வாறு    குறிப்பிட்டுக்  கூறியது;   அச்சமோ  -   அந்த
மனிதர்களிடம் கொண்ட