பக்கம் எண் :

68யுத்த காண்டம் 

அச்சத்தாலோ?  அவர்க்கு  அன்பினோ  -  அவர்களிடம் நீ
கொண்ட   அன்பு     காரணமாகவா?   யாவதோ - அல்லது
வேறேதேனும் காரணம் கருதியோ?
 

பிச்சர்-பித்தர்.  விறல்-வலிமை,  கொச்சை - இழிவு  (அற்பம்)
"தெள்ளிய  பொருள்  இயம்பலாற்றுவன்"  என  வீடணன்  முன்
கூறியதை நினைத்து 'உறுதிகள் இசைக்குவன்  என்றாய்"  என்றான்
என்க.  'உறுதிகள்  சொல்வதாகத்    தொடங்கி  பித்தர்  போல்
பிதற்றுகிறாயே' என வீடணன் கூறியதை எள்ளுகிறான்.
 

(101)
 

6172.

' "ஈங்கு மானுடப் பசுக்களுக்கு, இலை வரம்"

என்றாய்;

தீங்கு சொல்லினை; திசைகளை உலகொடும்

செருக்கால்

தாங்கும் யானையைத் தள்ளி, அத் தழல்

நிறத்தவனை

ஓங்கல் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது

உண்டோ?

 

ஈங்கு மானுடப்பசுக்களுக்கு   -   இங்கே மனிதர்களாகிய
இந்தப் பசுக்களைக் கொல்ல;   இலைவரம்   என்றாய் - நான்
(பிரமனிடம்)   வரம்   பெறவில்லை   என்று   கூறினாய்; தீங்கு
சொல்லினை
- இதனால் பழுதானதையே கூறினாய்; திசைகளை
உலகொடும் செருக்கால் தாங்கும்
- எல்லாத்  திசைகளையும்
உலகத்தோடு தமது வலிமையால் தாங்கும்;யானையைத் தள்ளி
-  திக்கு     யானைகளை     வென்று   விலக்கிட;அத்தழல்
நிறத்தவனை
- அந்தத் தீ நிறத்தவனான சிவபிரானை;  ஓங்கல்
ஒன்றொடும்
- அவனிருக்கும் கைலை மலையோடும்;எடுக்கவும்
வரம் கொண்டதுண்டோ?
-   பேர்த்து   எடுப்பதற்கு  வரம்
கேட்டுப் பெற்றதுண்டோ?
 

'மனிதர்பால் கொற்றம் கொள்ளலை' (6148) என்று வீடணன்
கூறியதை எண்ணி, 'இலைவரம்' என்றாய் என்றான்.
 

(102)
 

6173.

'மனக்கொடு அன்றியும், வறியன வழங்கினை;

வானோர்

சினக் கொடும் படை செருக்களத்து என்னை என்

செய்த?