பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 69

எனக்கு நிற்க; மற்று, என்னொடு இங்கு ஒரு

வயிற்று உதித்த

உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும்

உளதோ?

 

மனக்கொடு அன்றியும் -  மனம்  கொண்டு   சிந்தித்துப்
பார்க்காமலேயே; வறியனை வழங்கினை - பொருளற்ற வெறும்
சொற்களைக்   கூறினாய்;  வானோர்  சினக்கொடும்படை -
தேவர்களின்   சினம்மிக்க   கொடிய    படைகள்   எல்லாம்;
செருக்களத்து என்னை என்ன செய்த  - போர்க்களத்திலே
என்னை  என்ன செய்து விட்டன?எனக்கு  நிற்க - எனக்கு
இருக்கட்டும் ;மற்று என்னொடு இங்கு ஒருவயிற்று உதித்த-
என்னுடனே இங்கே ஒரு வயிற்றிலே தோன்றிய;உனக்கு - (என்
உடன்பிறந்தவனான)  உனக்கு;  மானிடர் - அந்த மனிதர்கள்;
வலியர்  ஆம்   தகைமையும்  உளதோ -  வலிமை மிக்க
தன்மையர் ஆவதுண்டோ?
 

வறியன-பொருள் இல்லாத வெற்றுரை.
 

(103)
 

6174.

'சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை; பன் முறை

தோற்று,

வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை;

விண்ணைக்

கல்லும் ஆற்றல் என் கிளையையும் என்னையும்

களத்தில்

கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும்

கொண்டாய்.

 

சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை - சொல்லத் தகுந்த
சொற்களை நீ தெரிந்து சொல்லவில்லை; பன்முறை தோற்று -
(நமது   பகைவர்கள்   என்னுடன்   போர்  செய்து) பலமுறை 
தோற்றும்;   வெல்லும் ஆற்றலும்  ஒரு   முறை இலை -
என்னை  வெற்றி  கொள்ளும்  வலிமையை ஒருமுறையும் கூட
அவர்கள்   பெறவில்லை;  விண்ணைக்கல்லும்  ஆற்றல் -
விண்ணுலகத்தையே பெயர்த்து   எறியத்தக்க   ஆற்றலுடைய;
என் கிளையையும் என்னையும்- எனது  உறவினர்களையும்
என்னையும்;    களத்தில்    கொல்லும்   மாற்றலர்  -
போர்க்களத்தில் கொல்லத்தக்க பகைவர்கள்;