- முன்னோனாகிய இரணியனுடைய; காதில் குண்டலங்கள் - காதிலணியும் காதணிகளாம்;இனிப் பெரு விறல் கூறல் - என்றால் அவனுடைய சிறந்த வீரத்தை எடுத்துக் கூறுவதற்கு; மற்று என் - வேறு என்ன வேண்டியுள்ளது? |
தருகதிரவன் - ஒளியினால் காக்கும் சூரியன். எண்தலம் - எண்ணுதற்குக் கருவியாகிய மனம். இரண்யம் - பொன். அக்ஷம் - கண், பொற்கணான் - இரண்யாட்சன். |
(12) |
| 6201. | 'மயர்வு இல் மன் நெடுஞ் சேவடி மண்ணிடை |
| வைப்பின், |
| அயரும், வாள் எயிற்று ஆயிர நனந் தலை அனந்தன்; |
| உயருமேல், அண்ட முகடு தன் முடி உற உயரும்; |
| பெயருமேல், நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும். |
| |
மயர்வு இல் மன்- எதனாலும் மனம் சோர்வுறாத மன்னனாகிய இரணியன்; நெடுஞ்சேவடி - தனது நீண்ட பெரிய பாதங்களை; மண்ணிடைவைப்பின் - தரையிலே வைப்பானாயின்; ஆயிரம் நனந்தலை அனந்தன் - ஆயிரம் படங்களைக் கொண்ட (பூமியைத்தாங்கும்) ஆதிசேடன்; அயரும் - (பாதங்களின் கனம் தாங்காது) தளர்வான்; உயருமேல் - (அந்த இரணியன்) எழுந்து நிற்பானாயின்;அண்டமுகடு தன் முடி உற உயரும்- அண்டத்தின் மேல் முகடு தனது தலையில் பொருந்த உயர்வான்; பெயரு மேல் - அவன், இடத்தை விட்டு அசைவானாயின்; நெடும் பூதங்கள் - பெரியனவான பூதங்கள்;ஐந்தொடு பெயரும் - ஐந்தினோடும் பெயர்வான். |
மயர்வு - சோர்வு. நனந்தலை - பணாமுடி (படம்). வாள் - கூர்மை (ஒளியுமாம்). |
(13) |
| 6202. | 'பெண்ணில், பேர் எழில் ஆணினில், அலியினில், |
| பிறிதும் |
| உள் நிற்கும் உயிர் உள்ளதில், இல்லதில், உலவான்; |
| கண்ணில் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்; |
| மண்ணில் சாகிலன்; வானிலும் சாகிலன்;-வரத்தால். |
| |
வரத்தால் - இரணியன் தான் பெற்ற வரத்தின் வலிமையால்; பெண்ணில் பேரெழில் ஆணினில் - பெண்களாலோ, பேரழகு படைத்த ஆண்களாலோ; அலியினில் - இவையிரண்டுமல்லாத |