அலியினாலோ; பிறிதும் உள்நிற்கும் - வேறு, உலகத்தில் நிலை பெற்றுள்ள; உயிர் உள்ளதில் இல்லதில் - உயிருள்ளவைகளாலோ, உயிர் இல்லாதவைகளாலோ;உலவான் - சாகமாட்டான்; கண்ணில் காண்பன- கண்ணால் காணப்படுவனவாலும்;கருதுவ - எண்ணத்தில் நினைக்கப்படுவனவற்றாலும்; யாவினும் கழியான் - இவை எவற்றாலும் அழியமாட்டான்; மண்ணில் சாகிலன் - நிலத்திலும் சாகமாட்டான்; வானிலும் சாகிலன் - விண்ணிலும் சாகமாட்டான். |
(14) |
| 6203. | 'தேவர் ஆயினர் ஏவரும், திரிதரும் இயக்கர் |
| யாவரேயும், மற்று எண்ணவும் நினைக்கவும் இயன்ற, |
| கோவை மால், அயன், மான்இடன், யாவரும் |
| கொல்ல, |
| ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்-அனையான். |
| |
அனையான் - அந்த இரணியன்; தேவர் ஆயினர் ஏவரும்- தேவர்கள் எவரும்;திரிதரும் இயக்கர் யாவரேயும் - நடமாடித் திரியும் இயக்கர் எவரும் பிறரால்; மற்று எண்ணவும் நினைக்கவும் இயன்ற - மற்றும் தியானிக்கவும் துதிக்கவும் முடிந்தவர்களான; கோவை மால், அயன், மான்இடன் - திரிமூர்த்திகள் என்ற வரிசையிலுள்ள மால், பிரமன், உமையாகிய பெண்ணை இடப்புறம் கொண்டுள்ள சிவன்;யாவரும் கொல்ல ஆவி தீர்கிலன் - ஆகிய எவரும் கொல்ல உயிர்நீங்கான்;ஆற்றலும் தீர்கிலன் - வலிமையும் நீங்கமாட்டான்; |
'எண்ணவும், நினைக்கவுமே இயன்றவர்' என்பதால் கண்களுக்குப் புலனாகாதவர் என்பது கருத்து. கோவை - வரிசை, நிரல். மான் + இடன்; மானை இடக்கையில் தரித்தவன் எனலும் ஆம். |
(15) |
| 6204. | 'நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த |
| மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், |
| மாளான்; |
| ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச் |
| சாரும் சாபமும், அன்னவன்தனைச் சென்று சாரா. |
| |
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் - தண்ணீரால் சாகமாட்டான் தீயாலும் சாகமாட்டான்;நிமிர்ந்த மாருதத்தினும் - மேல் நிமிர்ந்த காற்றினாலும்; மண்ணின் மற்று எவற்றினும் |