மாளான் - மண்ணுலகிலுள்ள வேறு எதனாலும் சாக மாட்டான்; ஓரும் தேவரும் முனிவரும் - ஆராய்ந்துணரும் தேவர்களும் தவவலிமை மிக்க முனிவர்களும்; பிறர்களும் உரைப்ப - மற்றவர்களும் சினந்து கூற;சாரும் சாபமும் - அதனால் வரும் சாபங்களும்; அன்னவன் தனைச் சென்று சாரா - அந்த இரணியனைச் சென்று அடையா. |
(16) |
| 6205. | 'உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக் |
| கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் |
| கொல்லா; |
| நள்ளின் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார் |
| கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் |
| கொள்வார்? |
| |
உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் - வீட்டுக்கு உள்ளேயும் சாகமாட்டான், வெளியிலும் சாகமாட்டான்; உலவாக் கொள்ளைத் தெய்வவான் படைக்கலம் - என்றும் அழியாது, தெய்வத்தன்மையுடைய படைக்கலங்கள்;யாவையும் கொல்லா - எவையும் அவனைக் கொல்லமாட்டா; நள்ளின் சாகிலன் பகலிடைச் சாகிலன் - இரவிலும் சாகான் பகலிலும் சாக மாட்டான்;நமனார் கொள்ளச் சாகிலன் - எமன் உயிரைக் கவரவும் இறக்கமாட்டான்; ஆர் இனி அவனுயிர் கொள்வார் - அவனது உயிரைக் கவரவல்லோர் யார் இருக்கிறார்கள்? |
'உள், புறம்' என்பன வீட்டுக்குள்ளே, வெளியே என்னும் பொருளன, கொள்ளை - மிகுதி. நள் - இரவு. |
(17) |
| 6206. | 'பூதம் ஐந்தொடும் பொருந்திய உணர்வினில் புணரா |
| வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் |
| விளியான்; |
| தாதை தன்னைத் தான் தனிக் கொலை சூழினும், |
| சாகான்; |
| ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன். |
| |
பூதம் ஐந்தொடும் பொருந்திய - மண்முதலிய ஐந்து பூதங்கள் உடன் பொருந்திய;உணர்வினில் புணரா - சுவைமுதலான ஐம்புல உணர்வினால் புணர்க்கப்படாத; வேதம் நான்கினும் விளம்பிய - நான்கு வேதங்களாலும் சொல்லப்பட்ட; பொருள்களால் விளியான் |