இரணியன் தன் மகனை வேதம் ஓதுமாறு கூறுதல் |
| 6208. | 'வாழியான்-அவன்தனைக் கண்டு, மனம் மகிழ்ந்து, |
| உருகி, |
| "ஆழி ஐய! நீ அறிதியால், மறை" என |
| அறைந்தான்- |
| ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான், உலகம் |
| ஏழும் ஏழும் வந்து அடி தொழ, அரசு வீற்றிருந்தான். |
| |
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் - உலக முடிவுக்காலமான ஊழிக்காலத்தையும் கடந்து நீண்ட ஆயுளை உடையவனும்; உலகம் ஏழும் ஏழும்- பதினான்கு உலகங்களும்; வந்து அடிதொழ- திரண்டு வந்து தனது பாதங்களில் வீழ்ந்து வணங்குமாறு; அரசு வீற்றிருந்தான் - எல்லா உலகங்களுக்கும் தானே மன்னனாக ஆட்சி செலுத்துபவனுமான இரணியன்; வாழியான் அவன் தனைக் கண்டு - நல்வாழ்வுக்குரிய நற்பேறு பெற்ற பிரகலாதனைப் பார்த்து; மனம் மகிழ்ந்து உருகி - மனம் மிக மகிழ்ந்து உள்ளம் உருகி; ஆழிஐய நீ அறிதியால் மறை - எனக்குப் பின் எனது ஆணையாகிய சக்கரத்தை இயக்கும் நீ எல்லா வேதங்களையும் கற்பாயாக; என அறைந்தான் - என்று கூறினான்; |
ஆழி - ஆணையாகிய சக்கரம். தனக்குப் பின் அரசாள இருப்பவன் என்பதால் இரணியன் 'ஆழி ஐய' என அழைத்தான் என்க. மனம் மகிழ்ந்து உருகி - நெஞ்சு நெகிழ்ந்து உருகி தந்தைக்கு உரிய இயல்பான அன்பின் நெகிழ்ச்சி இரணியனுக்கும் இருந்தது என்பதைக் கவிச்சக்கரவர்த்தி இப்பாடலில் குறித்து இருக்கிறார். |
(20) |
| 6209. | 'என்று, ஓர் அந்தணன், எல்லை இல் அறிஞனை |
| ஏவி, |
| "நன்று நீ இவற்கு உதவுதி, மறை" என நவின்றான்; |
| சென்று மற்றுஅவன்தன்னொடும் ஒரு சிறை |
| சேர்ந்தான்; |
| அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான். |
| |
என்று, ஓர் அந்தணன் - என்று கூறிய இரணியன் ஒரு மறை வல்லோனான;எல்லை இல் அறிஞனை ஏவி - எல்லையில்லாத அறிவுடையவனை ஏவி; 'நன்று நீ இவற்கு உதவுதி மறை' - நீ இவனுக்கு வேதங்களை நன்கு கற்றுக் கொடுத்து உதவுவாயாக; |