என நவின்றான் - என்று சொன்னான்;மற்று அவன் தன்னொடும் சென்று - பிரகலாதனுடன் அந்த மறைவல்லான் சென்று;ஒரு சிறை சேர்ந்தான் - ஓரிடத்தை அடைந்தான்; அன்று நான் மறை முதலிய - அன்றுமுதல் வேதம் முதலான எல்லாவற்றையும்; ஓதுவான் அமைந்தான் - கற்பித்திடத் தொடங்கினான். |
தன் பிள்ளைக்குக் கற்றுத் தருபவன் சிறந்த தகுதி உள்ளவனாய் இருத்தல் வேண்டும் என்பதால் 'எல்லை இல் அறிஞன்' என ஆசிரியனைக் குறிப்பிட்டார். முன்னை வேதத்தின் முதற்பெயர் மொழிவது மொழிந்தேன் (6213), ஓத வேண்டுவதில்லை (6215) என்பன ஓதப் புகுந்த மாணவனாகிய பிரகலாதன் கூற்றுகள். ஓதாது உணர்ந்த அவனுக்கு, கற்று அறிந்த வேதியன் கற்பிக்க முயல்வது வீண்முயற்சி, ஆயினும், உலகியல் வழக்காலும் அரசன் கட்டளையாலும் கற்பிக்க முயன்றான் என்பது கருத்து. ஓதுவான் - கற்பிப்பதற்கு. |
(21) |
| 6210. | 'ஓதப் புக்கு அவன், "உந்தை பேர் உரை" |
| எனலோடும், |
| போதத் தன் செவித் தொளை இரு கைகளால் |
| பொத்தி, |
| "மூ தக்கோய்! இது நல் தவம் அன்று" என |
| மொழியா, |
| வேதத்து உச்சியின் மெய்ப் பொருட் பெயரினை |
| விரித்தான். |
| |
ஓதப்புக்கு அவன் - கற்றுத்தரமுற்பட்ட ஆசிரியன் (பிரகலாதனை நோக்கி); 'உந்தைபேர்உரை'எனலோடும் - உனது தந்தையின் பெயரான இரணியாய நம, எனக்கூறு என்றவுடன்; தன் செவித் தொளை போத - தனது இருகாதுத் துளைகளையும், நன்றாக; இரு கைகளால் பொத்தி - இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு; மூதக்கோய் - மூத்த அறிவுடைய பெரியோனே!; 'இது நல்தவம் அன்று - இது சிறந்த தவநெறி ஆகாது; என மொழியா - என்று கூறி;வேதத்து உச்சியின் - வேதத்தின் முடிவான உபநிடதங்கள் கூறும்; மெய்ப்பொருட் பெயரினை - உண்மைப் பொருளான பரமனது பெயரை; விரித்தான் - விரித்துரைக்கலானான். |
புக்கு, பொத்தி, மொழியா என்ற வினை எச்சங்கள் விரித்தான் என்ற வினை முற்றைக் கொண்டு முடிந்தன. வேதத்து உச்சியின் மெய்ப் பொருட்பெயர் என்றது 'ஓம் நமோ நாராயணாய" என்ற திருமந்திரத்தை, |