"வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை" எனவரும் பெரியாழ்வார் திருமொழி (4, 3, 11) நினைவுகூரத்தக்கது. |
(22) |
| 6211. | ' "ஓம் நமோ நாராயணாய !" என்று உரைத்து, உளம் |
| உருகி, |
| தான் அமைந்து, இரு தடக் கையும் தலைமிசைத் |
| தாங்கி, |
| பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர்ப் புறம் பொடிப்ப, |
| ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி, |
| |
ஞானநாயகன் - ஞானம் மிக்க தலைவனாகிய பிரகலாதன்;'ஓம் நமோ நாராயணாய' - ஓம் நமோ நாராயணாய நம;என்றுரைத்து - என்னும் திருமந்திரத்தை உச்சரித்து; உளம் உருகி - மனம் நெகிழ்ந்து உருகி;தான் அமைந்து - தான் அடங்கி இருந்து; இருதடக் கையும் தலைமிசை தாங்கி - தனது இரு நீண்ட கைகளையும் தலையின் மீது சேர்த்து; பூநிறக் கண்கள் புனல் உக - தாமரை மலர் போன்ற இரு கண்களிலும் கண்ணீர் பெருக; மயிர்ப் புறம் பொடிப்ப - உடல் முழுதும் மயிர்சிலிர்க்க; இருந்தனன் - அமர்ந்திருந்தான்; அந்தணன் நடுங்கி - அதைக் கண்ட ஆசிரியனாகிய மறையவன் நடுக்க மெய்தி. |
கருவிலே திருவுடையவனாகிய பிரகலாதன் இளமையிலேயே ஞானம் மிக்கவனாக, ஏனைய ஞானிகளுக்கெல்லாம் தலைவனாக விளங்கினான் என்பதால் 'ஞான நாயகன்" என்றார். பூ; தாமரை. பூவெனப் படுவது பொறிவாழ் பூவே ஆதலின் தாமரை எனப்பட்டது. நிறம்: அழகு. அந்தணன் நடுங்கி என்ற வினை எச்சம் அடுத்த பாடலில் வரும் என்றான் என்ற வினை கொண்டு முடியும். |
(23) |
| 6212. | ' "கெடுத்து ஒழிந்தனை, என்னையும் உன்னையும்; |
| கெடுவாய் ! |
| படுத்து ஒழிந்தனை; பாவி ! எத் தேவரும் பகர்தற்கு |
| அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர, நின் |
| அறிவில் |
| எடுத்தது என் இது? என் செய்த வண்ணம் நீ?" |
| என்றான். |