பக்கம் எண் :

94யுத்த காண்டம் 

கெடுவாய் - கெடுமதி உடையவனே;  என்னையும்   உன்னையும்
கெடுத்து  ஒழிந்தனை 
-  (நீ  கூறிய  உரையால்)  நீ என்னையும்
கெடுத்தாய்  உன்னையும் கெடுத்தாய்; பாவி  படுத்து  ஒழிந்தனை
- பாவியே!  நம்   இருவரையும்   இறந்து  ஒழியச் செய்துவிட்டாய்;
எத்தேவரும்  பகர்தற்கு 
-   வேறு  எந்தத் தேவர்களும் கூடச்
சொல்லுவதற்கு;  அடுத்தது  அன்றியே  அயல்  ஒன்று பகர -
பொருந்திய  உனது  தந்தை  பெயர் அல்லாத வேறு ஒன்றைக் கூற;
நின் அறிவில் எடுத்தது என் இது
- உன் அறிவுக்குத் தோன்றிய
என்ன செயல் இது; என் செய்த வண்ணம் நீ என்றான் - என்ன
காரியம் செய்யத் துணிந்து விட்டாய் என்றான்.
 

கெடுவாய்- கெட்ட புத்தியுடையவனே. 'எல்லோரும்' கூறும் படி
கூறாமல் வேறொருபேர் பகர்ந்ததால் என்னையும், ஏன் உன்னையுமே
இரணியன் தண்டிப்பானே!  இருவரையும்,   கெடுத்தாயே'  என்றான்.
எப்படி உன்  அறிவில்  இப்படிச்   சொல்லத்  தோன்றியது! என்ன
காரியம் செய்து  விட்டாய்   என்று  அஞ்சிக் கூறினான் ஆசிரியன்
என்பது பொருள்.
 

(24)
  

6213.

' "என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்;

இனைய

உன்னை உய்வித்து, இவ் உலகையும் உய்விப்பான்

அமைந்து,

முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது

மொழிந்தேன்;

என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி"

என்றான்.

 

'என்னை   உய்வித்தேன்  -  என்னை உய்யச் செய்தேன்;
எந்தையை  உய்வித்தேன் -  எனது   தந்தையையும்   உய்யச்
செய்தேன்;  இனைய   உன்னை   உய்வித்து  -   இத்தகைய
உன்னையும்  உய்யுமாறு  செய்து; இவ்வுலகையும் உய்விப்பான்
அமைந்து 
-  இந்த  உலகத்தையும் உய்விப்பதற்காக அமைந்து;
முன்னை வேதத்தின்
- பழமையான வேதங்கள் புகழ்ந்து கூறும்;
முதற்பெயர் மொழிவது மொழிந்தேன்- முதற்பெயரென பரமன்
திருப்பெயரைக் கூறினேன்;என்னை குற்றம் யான் இயம்பியது-
நான்   சொன்னதில்  என்ன   குற்றம்   இருக்கிறது;  இயம்புதி
என்றான்
- கூறுவாயாக என்றான்.