வேதமுதற்பெயர்பிரணவம். அதனால் சுட்டப்படும் பொருள் நாராயணன். அந்தப் புனிதமான பெயரைக் கூறிய நான் என்ன குற்றம் செய்தேன் என்றான். |
(25) |
| 6214. | ' "முந்தை வானவர் யாவர்க்கும், முதல்வர்க்கும், |
| முதலோன் |
| உந்தை; மற்று அவன் திருப்பெயர் உரைசெயற்கு |
| உரிய |
| அந்தணாளனேன் என்னினும் அறிதியோ? ஐய ! |
| இந்த இப் பெயர் உரைத்து, எனைக் கெடுத்திடல்" |
| என்றான். |
| |
ஐய - ஐயனே; முந்தை வானவர் யாவர்க்கும் - முற்பட்டவர்களான தேவர்கள் எல்லோருக்கும்; முதல்வர்க்கும் - அத் தேவர்களுக்கு முதல்வர்களான அயன் அரி, சிவன் ஆகியோருக்கும்; முதலோன் உந்தை - முதன்மை பெற்று விளங்குபவன் உனது தந்தையான இரணியன்;மற்று அவன் திருப்பெயர் - உனது தந்தையின் திருநாமத்தை;உரை செயற்கு உரிய அந்தணாளனேன் - சொல்லுதற்குரிய அந்தணனாக நான் உள்ளேன்; என்னிலும் அறிதியோ - இங்கு என்னை விட நீ எல்லாம் தெரிந்தவனோ?; இந்த இப்பெயர் உரைத்து - இப்போது நீ சொன்ன இந்தப் பெயரைச் சொல்லி;எனைக் கெடுத்திடல் என்றான் - என்னைக் கெடுத்து விடாதே' என்றான். |
(26) |
| 6215. | 'வேத பாரகன் அவ் உரை விளம்பலும், விமலன், |
| "ஆதி நாயகன் பெயர் அன்றி; யான் பிறிது |
| அறியேன்; |
| ஓத வேண்டுவது இல்லை; என் உணர்வினுக்கு |
| ஒன்றும் |
| போதியாததும் இல்லை" என்று, இவை இவை |
| புகன்றான்: |
| |
வேதபாரகன் அவ்வுரை விளம்பலும் - வேதங்களை அறிந்த அந்தணனாகிய ஆசிரியன் இவ்வாறு கூறவும்; விமலன் - குற்றமற்றவனான பிரகலாதன்;ஆதி நாயகன் பெயர் அன்றி - எல்லா உலகங்களுக்கும் முதல் தலைவனான அப்பரமன் திருப் பெயர் அல்லாது;யான் பிறிது அறியேன் - நான் வேறெதுவும் |