அறியமாட்டேன்; ஓத வேண்டுவதில்லை - நான் கற்றுக் கொள்ள வேண்டியதும் (அப்பரமன் பெயரல்லாது) வேறில்லை; என் உணர்வினுக்கு - எனது அறிவுக்கு; ஒன்றும் போதியாததும் இல்லை - ஒன்றும் உணர்த்தப் படாத பொருள் இல்லை;என்று இவை இவை புகன்றான் - என்று மேலும் சில கூறுவானானான். |
(27) |
| 6216. | ' "தொல்லை நான்மறை வரன்முறைத் துணி |
| பொருட்கு எல்லாம் |
| எல்லை கண்டவன் அகம் புகுந்து, இடம் கொண்டது, |
| என் உள்; |
| இல்லை, வேறு இனிப் பெரும் பதம்; யான் அறியாத, |
| வல்லையேல், இனி, ஓதுவி, நீதியின் வழாத. |
| |
தொல்லை நான் மறை - பழமையான நான்கு வேதங்களும்; வரன் முறைத் துணி பொருட்கு எல்லாம் - மரபு பிறழாது துணிந்து கூறிய பொருள்களுக்கெல்லாம்; எல்லை கண்டவன் - முடிவான எல்லை கண்டவனாகியபரனே; என் அகம் புகுந்து இடம் கொண்டது - எனது உள்ளத்திலே புகுந்து விரும்பி உறைவது;என் உள் - எனக்குள்ளாகும்;வேறு இனிப் பெரும்பதம் இல்லை - இதைவிட வேறு சிறந்தபதம் எதுவுமில்லை; யான் அறியாதவல்லையேல் - நான் அறியாதவை ஏதேனும் நீ வல்லவனானால்;நீதியின் வழாத இனி ஓதுவி- நீதி நெறி பிறழாத ஒன்றை இனி எனக்குக் கற்றுக் கொடுப்பாயாக. |
வரன்முறை - மரபுநெறி. துணி பொருள் - அறுதியிட்டு துணிந்துரைத்த பொருள். எல்லைகண்டவன். முடிவிடமாக அமைந்தவன். இடம் கொண்டது. விரும்பி வாழ்வது. அகம் - மனம். என் உள் - எனக்குள். பதம். நிலை (பதவி); பெயருமாம். நீதியின் வழாத - அறத்துக்கு மாறுபடாத. ஓதுவி-கற்பிப்பாயாக. வல்லையேல். வல்லவனாயின் என்றதால் அத்தகையவல்லமை உனக்கு இல்லை என்பது குறித்து நின்றது. |
(28) |
| 6217. | ' "ஆரைச் சொல்லுவது, அந்தணர் அரு மறை |
| அறிந்தோர், |
| ஓரச் சொல்லுவது எப் பொருள், உபநிடதங்கள், |
| தீரச் சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும் |
| பேரைச் சொல்லுவது அல்லது, பிறிதும் ஒன்று |
| உளதோ? |