அந்தணர் அருமறை - வேதம் வல்ல அந்தணர்களின் அரிய வேதங்கள் எல்லாம்; ஆரைச் சொல்லுவது - யாரைச் சிறப்பித்துப் பேசுகிறதோ -அறிந்தோர் - கற்றுணர்ந்த சான்றோர்கள்; ஓரச் சொல்லுவது எப்பொருள்- ஓர்ந்து கூறுவது எந்தப் பொருளையோ -உபநிடதங்கள் தீரச் சொல்பொருள் - அதுவே எல்லா உபநிடதங்களும் முடிந்த முடிவாகக் கூறும் பொருள் ஆகும்; தேவரும் முனிவரும் - அதனை உணர்ந்த தேவர்களும் முனிவர்களும்; செப்பும் பேரைச் சொல்லுவதல்லது - கூறும் அந்த திருப்பெயரைக் கூறுவதைத் தவிர;பிறிதும் ஒன்று உளதோ - வேறு ஒன்றும் உள்ளதோ? |
ஓரச் சொல்லுதல் - ஆய்ந்தறியும்படி கூறுதல். தீரச் சொல்லுதல் - முடிந்த முடிவாகக் கூறுதல். யாரை என்பது ஆரை என வழங்குவது உலக (மரூஉ) வழக்கு. பெயர் என்பதே பேர் என வழங்குவதும் மரூஉ வழக்கே |
(29) |
| 6218. | ' "வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் |
| உணர்ந்த |
| போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும், |
| சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு |
| சமைந்தேன்; |
| ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ? |
| |
'வேதத்தானும் - வேதங்களை எல்லாம் கற்று அறிவதாலும்; நல்வேள்வியினானும் - நன்மை தரும் வேள்விகளைச் செய்து முடிப்பதனாலும்;மெய் உணர்ந்த போதத்தானும் - உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்த மெய்ஞ்ஞானத்தாலும்; அப்புறத்துள எப்பொருளானும் - இவைகளுக்கு அப்பாலுள்ள கர்மம், பக்தி, யோகம் போன்றவற்றினாலும்;சாதிப்பார் பெறும் பெரும்பதம் - சாதித்த மேலோர் அடையும் பெரிய தொரு பேற்றினை;தலைக் கொண்டு சமைந்தேன் - பரமன் நாமத்தைக் கூறுதலை மேற் கொண்டு அடைந்துய்ந்தேன்; ஓதி, கேட்பது பரம் பொருள்- ஓதியும், ஓதக் கேட்கும் பயன் அடைவதற்குரிய மேலான பொருள்; இன்னம் ஒன்று உளதோ - இதைவிடவும் நன்மை பயப்பது வேறு ஒன்று உள்ளதோ? |