பக்கம் எண் :

98யுத்த காண்டம் 

நற்பலன்தருவது   வேள்வியாதலின்  'நல்வேள்வி'   என்றார். 
சாதித்தல்;  சித்தியடைதல்.   பெரும்பதம்.  பெரும்பேறு.  தலைக்
கொண்டு; மேற்கொண்டு. பரம்பொருள்; மேலான பொருள்.
 

(30)
 

6219.

' "காடு பற்றியும், கன வரை பற்றியும், கலைத்

தோல்

மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால்

வீடு பெற்றவர், 'பெற்றதின் விழுமிது' என்று

உரைக்கும்

மாடு பெற்றனென்; மற்று, இனி என், பெற வருந்தி?

 

காடு பற்றியும்- காட்டை இடமாகக் கொண்டும்; கன வரை
பற்றியும்
-   பெரிய   மலையை     இடமாகக்   கொண்டும்;
கலைத்தோல் மூடி  முற்றியும் -  மான் தோலைப் போர்த்தும்
உடுத்தியும்;   முண்டித்தும்    நீட்டியும்    -     தலையை
மொட்டையடித்தும்,   முடியை   வளர்த்தும்;  முறையால் வீடு
பெற்றவர்
- தமக்குரிய  முறையானதவ   ஒழுக்கத்தால்   வீடு
பேற்றை அடைந்தவர்கள் எல்லாம்;  'பெற்றதின்   விழுமிது'
என்றுரைக்கும்
-  பெற்ற  பேற்றைவிட   மேலானது  என்று
கூறுகின்ற;  மாடு   பெற்றனன்  -   பெரிய   செல்வத்தைப்
பெற்றுள்ளேன்;மற்று  இனி  வருந்தி  என் பெற - உடலை
வருத்தி நான் இனிப் பெறுவதற்கு என்ன இருக்கிறது?
 

கனவரை - பெரிய மலை.  முற்றி  மூடி -  முழுமையாகப்
போர்த்து  'மழித்தலும்  நீட்டலும்  வேண்டா'  என்ற  குறள்
நினைதற்குரியது. முறை - அவரவர்க்குரியதவ ஒழுக்கம்.
 

(31)
 

6220.

' "செவிகளால் பல கேட்டிலர்ஆயினும், தேவர்க்கு

அவி கொள் நான்மறை அகப் பொருள் புறப்பொருள்

அறிவார்;

கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்;-

காலால்

புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின்

புக்கார்.

 

காலால்புவிகொள்  நாயகற்கு-  தன்   திருப்பாதங்களால்
(அளந்து) உலகத்தைத் தனக்குரியதாக்கிக் கொண்ட தலைவனாகிய
திருமாலுக்கு;   அடியவர்க்கு    அடிமையின்    புக்கார்  -
அடியார்கள் எவரோ அவர்களுக்கு அடிமைபூண்டவர்கள்;