செவிகளால் பல கேட்டிலர் ஆயினும் - காதுகளால் பல நூல்களை கேட்கும் கேள்வி ஞானமில்லாதவரானாலும்; தேவர்க்கு அவிகொள்- தேவர்களுக்கு அவியுணவு அளிக்கும் (மந்திரங்களைத் தன்னிடம் கொண்ட); நான்மறை அகப் பொருள் புறப் பொருள் அறிவார் - நான்கு வேதங்களும் நுட்பமாகவும் வெளிப்படை யாகவும் கூறிய எல்லாப் பொருள்களையும் அறியவல்லாராவர்; கவிகள் ஆகுவார் - தெய்விகக் கவிஞர்களும் ஆவார்கள்;மெய்ப் பொருள் காண்குவர்- மெய்ப்பொருளைக் கண்டறிய வல்லவராவார். |
மகாபலியினிடம் மூவடி மண் கேட்டுப் பெற்று, ஓரடியில் உலகம் முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டவன் என்பது 'காலால் புவிகொள் நாயகன்" எனக் கூறப்பட்டது. இவ்வாறு பொருள் உரைத்தல் பொருந்தாது. ஏனெனில் இது, வாமனா வதார சரிதை. இப்பாடல் பிரகலாதன் கூற்றாக வருகிறது. (கம்பன் கூற்றாகில் தவறில்லை.) நரசிங்காவதாரத்துக்குப் பிற்பட்ட வாமனாவதார சரிதை நிகழ்ச்சியை நரசிங்காவதாரமே இன்னும் நிகழாதிருக்கிற போது முன்னர்க்கூறுதல் காலமலைவு என்னும் குற்றத்தை ஏறிட்டு வழுவாம் ஆதலின் தன் திருவடியாலே உலகத்தைத் தனக்கு அடிமையாக்கி ஆட்கொண்டருளும் நாயகன் என்று பொதுவாக இறைவன் ஆட்கொள்ளும் திறம்பற்றியதாகப் பொருள் உரைத்தலே சிறந்தது என்பது மகாவித்துவான்; மயிலம், பேராசிரியர். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. |
(32) |
| 6221. | ' "எனக்கும், நான்முகத்து ஒருவற்கும், யாரினும் |
| உயர்ந்த |
| தனக்கும் தன் நிலை அறிவுஅரும் ஒரு தனித் |
| தலைவன் |
| மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்! |
| உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்" என |
| உரைத்தான். |
| |
மறையோய் - (வேதங்களைக் கற்ற) வேதியனே!;எனக்கும் - எனக்கும்;நான் முகத்து ஒருவற்கும்- நான்கு முகங்களை உடைய பிரமதேவனாகிய அந்த ஒருவனுக்கும்; யாரினும் உயர்ந்த தனக்கும் - எல்லோரை விடவும் மிக உயர்ந்து விளங்கும் தனக்குமே; தன் நிலை அறிவரும்- தனது நிலையை அறிவதற்கு அரிய; ஒரு தனித் தலைவன் - ஒப்பற்ற பெருந்தலைவனாகிய பரமன்; |