மனக்குவந்தனன் - எனது மனத்தில் கோயில் கொண்டான்; யாவையும் வந்தன- அதனால் எல்லாவகை ஞானங்களும் எளிதில் வந்தெய்தின; உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் - உனக்கும் இதை விடவேறு நல்லது எதுவுமில்லை என்று கூறினான். |
ஒருதனித்தலைவன் என்பது "உன்னை நீ தானும் உணராதாய்" என்ற வில்லிபாரதப் பாடலையும் (வில்லி. கிருட்டிணன் தூது.36); தனக்கும் தன் தன்மை அறிவரியான் என்பதையும் (நம்மாழ்வார் 2892) நினைவுறுத்தும். மனக்கு - மனத்துக்கு என்பதன் தொகுத்தல் விகாரம். இன்னதின் - இதைவிடவும் ஒரு தனி - மீமிசைச் சொல். |
(33) |
மறையவன் நிகழ்ந்ததை இரணியனுக்கு அறிவித்தல் |
| 6222. | 'மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன், மறையவன்; |
| மறுகி, |
| "ஏற்றம் என்? எனக்கு இறுதி வந்து எய்தியது" |
| என்னா, |
| ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான், |
| தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் எனச் |
| சொன்னான்: |
| |
மறையவன் - ஆசிரியனாகிய அந்த வேதியன்;மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் - பிரகலாதன் கூறியன கேட்டு எந்த ஒரு மறு மொழியும் கூறவில்லை; மறுகி - மனம் கலங்கி; ஏற்றம் ஏன்? - இனி எனக்கு என்ன ஏற்றம் வரப் போகிறது?; எனக்கு இறுதி வந்து எய்தியது - எனக்கு அழிவு காலம் வந்து சேர்ந்தது; என்னா- என்று எண்ணியவனாக; ஊற்றம் இல்லவன் - மனத்துணிவு இல்லாத அவன்; ஓடினன் கனகனை உற்றான்- ஓடோடியும் சென்று இரணியனை அடைந்தான்; தோற்ற வந்த தோர் - பின்னால் நேர இருப்பதை உணர்த்த வந்த ஒரு; கனவு கண்டனன் எனச் சொன்னான் - கனவு கண்டவனைப் போல இரணியனிடம் சொல்லலானான். |
ஏற்றம் - ஆக்கம். ஊற்றம் - மனஉறுதி. கனகன் - இரணியன். தோற்ற வந்த தோர் கனவு; பின்னால் நேர இருக்கும் தீங்கைத் தெரிவிக்க வந்த ஒரு கனவு. |
(34) |