| 6223. | ' "எந்தை ! கேள்: எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் |
| இயம்பச் |
| சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி, |
| 'முந்தையே நினைந்து, என் பொருள் முற்றும்?' என்று |
| உரைத்து, உன் |
| மைந்தன் ஓதிலன், வேதம்" என்று உரைத்தனன், |
| வணங்கி. |
| |
வணங்கி - இரணியனை அடைந்த மறையவன் அவனை வணங்கி; எந்தை கேள் - எனக்குத் தந்தை போன்ற தலைவனே நான் உரைப்பதைக் கேட்பாயாக; உன் மைந்தன் - உனது மகன்; எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும்- எனக்கு இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவியிலோ;இயம்பச் சிந்தையால் இறை நினைத்தற்கும் - கூறுவதற்கும் ஒரு சிறிது மனத்தில் நினைப்பதற்கும்; அடாதன செப்பி - தகாதனவற்றைக் கூறி; 'முந்தையே நினைந்து என் பொருள் முற்றும்' - முன்பே நினைத்து, எனக்கு வேதப் பொருள் அத்தனையும் முற்றுப் பெற்றுள்ளது;என்று உரைத்து - என்று கூறி; வேதம் ஓதிலன் - நான் கற்றுத் தரத் தொடங்கிய வேதத்தை ஓதாதவனானான்; என்று உரைத்தனன் - என்று, இரணியனிடம் கூறினான். |
(35) |
இரணியன் மறையவன் உரையாடல் |
| 6224. | 'அன்ன கேட்டு, அவன், "அந்தண! அந்தணர்க்கு |
| அடாத, |
| முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத, |
| தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது, |
| என்ன சொல், அவன் இயம்பியது? இயம்புதி" |
| என்றான். |
| |
அன்னகேட்டு, அவன் - மறையவன் கூறிய அவற்றைக் கேட்டு, இரணியன் மறையவனை நோக்கி; அந்தண - அந்தணனே; அந்தணர்க்கு அடாத - மறையவர்கள் கேட்கத் தகாததும்; முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையில்படாத- முன்பு யாரும் கூறுதற்குரிய முறைமையில் படாததும்;தன்னது உள் உறும் உணர்ச்சியால் - தனது உள்ளத்தே முகிழ்த்த உள்ளுணர்ச்சியினால்; புதுவது தந்தது - புதியதாகக் கூறியதுமான; என்ன சொல் அவன் |