இயம்பியது - என்ன சொல் அவன் சொன்னது? இயம்புதி என்றான் - நீ கூறுவாயாக என்றான். |
அன்ன - மறையவன் கூறிய அந்தச் சொற்கள். அடாத - தகாத முறைமையில் படாத - முறையோடு பொருந்தாத. |
(36) |
| 6225. | 'அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி, |
| சிரதலம் கரம் சேர்த்திடா, "செவித் தொளை சேர்ந்த |
| உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், |
| உரவோய்! |
| நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்' என |
| நவின்றான். |
| |
அரசன் அன்னவை உரை செய - அரசனாகிய இரணியன் அவ்வாறு கூறினானாக; மறையவன் அஞ்சி - அந்தணன் பயந்து; சிரதலம் கரம் சேர்த்திடா - தலைமீது கரங்களைக் கூப்பி வணங்கி; 'செவித் தொளை சேர்ந்த - காதுத் தொளைகளிலே புகுந்த; உரகம் அன்ன சொல் - பாம்புக் கொப்பான அந்தச் சொல்லை; யான் உனக்கு உரை செயின் - நான் உனக்குச் சொல்லு வேனாயின்; உரவோய் - வலிமை மிக்கவனே; நரகம் எய்துவென் - நான் நரகத்தை அடைவேன்;நாவும் வெந்து உகும் - எனது நா வெந்து அழியும்; என நவின்றான் - என்று கூறினான். |
'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதற் கொப்ப மறையவன் நடத்தை அமைந்தது. பிரகலாதன் ஓதிய திருவெட்டெழுத்தைத் தான் சொன்னால் நரகம் கிடைக்கும், நாக்கு வெந்துபோகும் என்னும் நிலையை உன்னுக. |
(37) |
இரணியன் மைந்தனை அழைத்து நிகழ்ந்தன கேட்டல் |
| 6226. | ' "கொணர்க என் மைந்தனை, வல் விரைந்து" |
| என்றனன், கொடியோன்; |
| உணர்வு இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி, |
| கணனின் எய்தினர், "பணி" என, தாதையைக் |
| கண்டான்- |
| துணை இலான்தனைத் துணை என உடையவன் |
| தொழுதான். |