கொடியோன் - மிகக் கொடியவனாகிய இரணியன்;கொணர்க என்மைந்தனை வல் விரைந்து என்றனன் - என் மகனை, மிகவிரைவில் இங்கு அழைத்து வாருங்கள் என ஏவலர்களுக்கு உத்தரவிட்டான்; உணர்வு இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி- நல்லுணர்வு இல்லாத நெஞ்சினனாகிய இரணியனின் ஏவலர்கள் விரைவாகச் சென்று; கணனின் எய்தினர்- ஒரு கணப் பொழுதில் பிரகலாதனை அடைந்தார்கள்; பணி என - அரசனது 'கட்டளை' என்று கூற; துணை இலான் தனை - தனக்குவமையும் ஒப்பும் இல்லாதவனான பரந்தாமனை; துணை என உடையவன் - தனக்கு துணை உடையவனான பிரகலாதன்; தாதையைக் கண்டான் தொழுதான்- தனது தந்தையான இரணியனைக் கண்டு வணங்கினான். |
உணர்வு - நல்ல அறிவு. வல்விரைந்து - மிக விரைவாக. கணனின் - கணப் பொழுதில். 'துணையிலான்' என்றது தனக்குவமையில்லாத பரமனை. 'துணையென உடையவன்' திருமாலையே உயிர்த்துணை எனக் கொண்ட பிரகலாதனை. செயல்களின் விரைவு பாடலில் புலப்படுகின்றது. ஏவலர் கடமைப்பாங்கும் பிரகலாதனின் பணிவும் தெள்ளிதின் உணர்த்தப்பட்டன. |
(38) |
| 6227. | 'தொழுத மைந்தனை, சுடர் மணி மார்பிடைச் |
| சுண்ணம் |
| எழுத, அன்பினின் இறுகுறத் தழுவி, மாடு இருத்தி, |
| முழுதும் நோக்கி, "நீ, வேதியன் கேட்கிலன் முனிய, |
| பழுது சொல்லியது என்? அது பகருதி" என்றான். |
| |
தொழுத மைந்தனை - (தனது பாதங்களில் வீழ்ந்து) வணங்கிய மகனை; சுடர்மணி மார்பிடை - ஒளிமிக்க தனது மார்பிலே பூசப்பட்ட;சுண்ணம் எழுத -வாசனைப் பொடிபிரகலாதன் உடலிலே படும்படி;அன்பினில் இறுகுறத் தழுவி - அன்போடு, இறுகத் தழுவி; மாடு இருத்தி - தனக்குப் பக்கத்திலே இருக்கச் செய்து;முழுதும் நோக்கி - மகனைப் பாதாதிகேசமாக முழுவதும் பார்த்து; நீ வேதியன் கேட்கிலன் முனிய - மகனே! நீ ஆசிரியன் கேட்க இயலாதவனாக கோபம் கொள்ளும்படி; பழுது சொல்லியது என்? - தவறுபடக் கூறியது என்ன?; அது பகருதி என்றான் - அதைக் கூறுவாயாக என்றான். |