சுடர் மணி மார்பு - இரணியன் பொன் நிறமுடையவன். ஒளிமிக்க ஆபரணங்களும் அணிந்துள்ளான். எனவே, அவன் மார்பு ஒளியுடைய மார்பு எனப்பட்டது. எழுத - பூச. |
(39) |
பிரகலாதன் உரையின் சிறப்புக் கூற இரணியன் அதனைச் சொல்ல வேண்டல் |
| 6228. | ' "சுருதி ஆதியில் தொடங்குறும் எல்லையில் |
| சொன்ன |
| ஒருவன், யாவர்க்கும் நாயகன், திருப் பெயர் உணரக் |
| கருதக் கேட்டிடக் கட்டுரைத்து, இடர்க் கடல் கடக்க |
| உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல்" என |
| உரைத்தான். |
| |
சுருதி ஆதியில் தொடங்குறும் எல்லையில் - வேதம் முதலிலே ஆரம்பிக்கும் சமயத்தில்; சொன்ன ஒருவன் யாவர்க்கும் நாயகன் - சொன்ன ஒப்பற்ற ஒருவனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனும் ஆகிய திருமாலுடைய;திருப்பெயர் - சிறந்த திரு நாமமானது;உணர, கருத, கேட்டிட- அறியவும், நினைக்கவும், கேட்கவும் செய்து;கட்டுரைத்து - நாளும்இடை விடாது சொல்லி;இடர்க் கடல் கடக்க உரிய - துன்பக் கடலில் இருந்து கடந்து கரையேற உரியதாகும்;மற்று இதின் - வேறு இதை விடவும்; நல்லது ஒன்று இல் - நமக்கு நன்மைதருவது ஒன்றில்லை; என உரைத்தான் - என்று பிரகலாதன் கூறினான். |
(40) |
| 6229. | 'தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய, தீயோன் |
| "தா இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்; |
| ஆவது ஆகுக; அன்று எனின், அறிகுவம்" என்றே, |
| "யாவது, அவ் உரை? இயம்புதி, இயம்புதி!" |
| என்றான். |
| |
தேவர் செய்கையன்- (அசுரனான இரணியனுக்கு மகனாகப் பிறந்தும்) தேவர்களைப் போன்ற சிறந்த ஒழுக்கத்தை உடையவனாகிய பிரகலாதன்; அங்ஙனம் உரை செய- அவ்வாறு கூற; தீயோன் - கொடிய இயல்புடைய இரணியன்; தா இல் வேதியன் - குற்றமில்லாத அந்தணனாகிய ஆசிரியன்; தக்கதே உரை செயத்தக்கான் - தகுதியானவைகளையே கூறத் தகுந்தவனாவான்; ஆவது ஆகுக - நடக்கவேண்டியது |