நடக்கட்டும்; அன்று எனின் அறிகுவம்- இவன் கூறும் சொல்நமக்கு நன்மை தராதது என்றாலும் அதை அறிவோம்; என்றே - என்றெண்ணியவனாக;யாவது அவ்வுரை இயம்புதி இயம்புதி என்றான் - நீ சொல்லும் அந்தப் பெயர் எது கூறுக கூறுக என்றான். |
'இயம்புதி இயம்புதி' விரைவு பற்றி வந்த அடுக்கு. தேவர் செய்கையன் - அரக்கர் குலத்தினன் ஆயினும் தேவர்களைப் போன்ற நடத்தை உடையவன் என்பது கருத்து; நீதியால் வந்ததொரு நெடுந்தரும் நெறியல்லால் சாதியால் வந்த சிறு நெறியறியான்' என வீடணனைப் பற்றி உரைப்பது நினைவு கூரத்தக்கது.(7625) |
ஆசிரியன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான் என்று இரணியன் கருதியதை 'தக்கதே உரைசெயத்தக்கான்" என்ற தொடர் உணர்த்துகிறது. |
(41) |
எட்டெழுத்தின் பெருமையைப் பிரகலாதன் இயம்புதல் |
| 6230. | ' "காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால், |
| சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த |
| ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன் |
| நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய! |
| |
காமம் யாவையும் தருவதும் - நாம் விரும்பும் நற்பேறுகள் எல்லாவற்றையும் தரவல்லதும்; அப்பதம் கடந்தால் - (விரும்பும் நிலையான) அப்பதவிகளைக் கடந்தபின்பு ; சேமவீடு உறச் செய்வதும் - என்றும் அழியாத நிலைத்த தன்மையுடைய பாதுகாப்புதவும் வீட்டின்பத்தைத் தருவதும்; செந்தழல் முகந்த - செம்மையான தீயால் முகந்து கொள்ளப்படும்;ஓம வேள்வியின் உறுபதம் - யாகத்தினால் அடையும் துறக்கம் முதலிய பதவிகளிலே;உய்ப்பதும் - நம்மைச் செலுத்துவதும்; ஒருவன் நாமம் - ஒப்பற்ற ஒருவனாகிய பரமனது திருநாமமே; அன்னது கேள் நமோ நாராயணாய- அதனைக் கேட்பாயாக ஓம்நமோ நாராயணாய நம என்பது அது. |
காமம் - விரும்பும் நற்பேறுகள். சேமம் - பாதுகாப்பு. சேமவீடு - பரமபதம். "நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே" எனவெல்லாம் அருளிச் செயல் கூறுவதை நினைவு கூர்வோமாக. இம்மை, மறுமை இன்பங்களைத் தரவல்லது இத்திரு மந்திரமே என்பது கருத்து. |
(42) |