| 6231. | ' "மண்ணின்நின்று மேல் மலர் அயன் உலகு உற |
| வாழும் |
| எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின் |
| உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும், |
| எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை. |
| |
மண்ணின் நின்று - இந்த மண்ணுலகு தொடங்கி; மேல் மலர் அயன் உலகு உற - மேலேயுள்ள பிரமதேவனுக்குரிய சத்தியலோகம் வரை எங்கும்; வாழும் எண்இல் பூதங்கள் - வாழுகின்ற எண்ணற்ற உயிரினங்களில்; நிற்பன திரிவன - நிலையியற் பொருள், இ யங்கியற் பொருள்; இவற்றின்- ஆகிய இவ்விரு வகைப் பொருள்களின்; உள்நிறைந்துள - உள்ளத்தே நிறைந்திருக்கின்ற; கரணத்தின் ஊங்கு உள உணர்வும்- உயிர் உணர்வும் அதைக்கடந்து நிற்கும் மெய்யுணர்வும் (ஞானம்); எண்ணுகின்றது - நினைந்து போற்றுவது; இவ்வெட்டெழுத்தே - இந்த எட்டெழுத்து மந்திரத்தினையேயாம்; பிறிது இல்லை- இதுவல்லாத வேறு எதுவும் இல்லை. |
மேல் மலர் அயன் உலகு - பிரம்ம தேவன் வாழும் சத்திய லோகம் பூதங்கள் - (பூதங்களின் கூட்டால் உருவாகும்) உயிர் வர்க்கம் கரணம் - உள்ளம், உரை, செயல் முதலியன |
(43) |
| 6232. | ' "முக் கண் தேவனும், நான்முகத்து ஒருவனும் |
| முதலா, |
| மக்கள்காறும், இம் மந்திரம் மறந்தவர் மறந்தார்; |
| புக்குக் காட்டுவது அரிது; இது பொதுவுறக் கண்டார் |
| ஒக்க நோக்கினர்; அல்லவர் இதன் நிலை உணரார். |
| |
முக்கண் தேவனும்- மூன்று கண்களை உடைய சிவ பெருமானும்; நான் முகத்து ஒருவனும் முதலா - நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முதலாக; மக்கள் காறும் - மண்ணுலகில் வாழும் மக்கள் இறுதியாக;இம்மந்திரம் மறந்தவர்- இவ்வெட்டு எழுத்து மந்திரத்தை மறந்தவர்கள்;மறந்தார் - தாம் அடைய இருந்த உறுதிப் பேறுகளை மறந்தவராவார்;புக்குக் காட்டுவது அரிது இது - இதன் பொருளை நுணுக்கமாக ஆராய்ந்து அறிவிப்பதென்பது இயலாத தொன்று; பொதுவுறக் கண்டார் - வேறுபாடின்றி எக்காலத்துக்கும் பொது நெறி நின்று யோகத்தால் அறிந்த மேலோரும்; ஒக்க நோக்கினர் - அவர் வழிநின்று |