பொருந்தி மெய்யுணர்ந்த ஞானிகளும்; அல்லவர் இதன் நிலை உணரார் - அல்லாத மற்றவர் இம்மந்திரத்தின் சீர்மையை அறிந்துணர மாட்டார். |
அறிவு கொண்டு ஆராயும் வெற்றறிவின் வலையிலே மந்திரப் பெருமை சிக்காது. ஞானியர், யோகியர் அனுபவித்தறிவது அதன் சீர்மை. |
(44) |
| 6233. | ' "தோற்றம் என்னும் அத் தொல் வினைத் தொடு |
| கடல் சுழிநின்று |
| ஏற்று நன் கலன், அருங் கலன் யாவர்க்கும், இனிய |
| மாற்ற மங்கலம், மா தவர் வேதத்தின் வரம்பின் |
| தேற்ற மெய்ப்பொருள், திருந்த மற்று இதின் இல்லை, |
| சிறந்த.* |
| |
தோற்றம் என்னும் - தொடர்ந்து வரும் பிறவி என்ற; தொடு கடல் - ஆழமான பெரிய தொரு கடலில்; தொல்வினைச் சுழிநின்று - பழவினைகளாகிய சுழிகளில் இருந்து; ஏற்றும் நன்கலன் - உயிர்களை (முத்திஎன்ற) கரையிலே சேர்க்கும் மரக்கலம்;யாவர்க்கும் அருங்கலன் - எல்லோருக்கும் அணியத் தகுந்த அரிய அணிகலன்; இனிய மாற்ற மங்கலம் - எத்தகையோர்க்கும் இன்பம் தரும் இனிய மங்கல மொழி; மாதவர் - மேலான தவமுனிவர்களுக்கு; வேதத்தின் வரம்பின் - வேதங்களுக்கு வரம்பாக; தேற்ற மெய்ப் பொருள் - தெளிந்துரைக்கப்படும் மெய்ப்பொருள்; திருந்தமற்று இதின் சிறந்த இல்லை- எத்தகையோரும் திருந்திய வாழ்வு வாழ இந்த எட்டெழுத்து மந்திரத்தைவிடச் சிறந்தது வேறு எதுவுமில்லை. |
தோற்றம் - பிறப்பு. தொடர்ந்து வருதலின் 'தொடுகடல்' என்றார்; (சகரால்) தோண்டப்பட்டதால் தொடு கடல் என்றும் கொள்ளலாம். 'பிறவிப் பெருங்கடல்' என்ற குறள் ஒப்பிடத்தக்கது. தொல்வினை பழவினை நல்வினையும் பிறப்புக்குக் காரணமாதலின் 'இருள் சேர் இருவினை' என்ற குறள் உரை (10) நினைவு கூரத்தக்கது. பிறவிக் கடலில் தொல்வினை என்னும் சுழிகளில் வீழ்ந்து அழியாது முத்தியாகிய கரை சேர்ப்பது இந்த மந்திரமே என்பார் "நன்கலன்" என்றார். கலம் என்பதன் போலி கலன்: மரக்கலமரம். அருங்கலன் - அணிகலம். 'நலம் தரும்' சொல்லாதலால்' மாற்றமங்கலம்" என்றார். |
(45) |