| 6234. | ' "உன் உயிர்க்கும், என் உயிர்க்கும், இவ் |
| உலகத்தினுள்ள |
| மன்னுயிர்க்கும், ஈது உறுதி என்று உணர்வுற |
| மதித்துச் |
| சொன்னது இப் பெயர்" என்றனன், அறிஞரின் |
| தூயோன்; |
| மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ |
| விழித்தான். |
| |
அறிஞரில் தூயோன் - அறிஞர்களில் தூய பேரறிவினனாகிய பிரகலாதன்; உன் உயிர்க்கும் - உன்னுடைய உயிருக்கும்; என் உயிர்க்கும் - என்னுடைய உயிருக்கும்; இவ்வுலகத்திலுள்ள மன்னுயிர்க்கும் - இவ்வுலகத்தில் வாழுகின்ற வேறு பல உயிர்களுக்கும்; ஈது உறுதி என்று - இதுதான் உ.றுதிபயப்பதென்று; உணர்வு உற மதித்துச் சொன்னது- எனதுள்ளத்தே முகிழ்த்த நல்லுணர்வால் ஆராய்ந்து கூறியது; இப்பெயர் - இந்தப் பரமனின் திருப்பெயராகும்; என்றனன்- என்று கூறினான்; (அதைக்கேட்ட) மின் உயிர்க்கும் வேல் இரணியன் - மின்னலைப் போல ஒளிரும் வேலை உடைய இரணியன்; தழல் எழ விழித்தான் - (சினத்தால்) கண்களில் நெருப்பெழ விழித்தான். |
'அறிஞரில் தூயோன்' என்றது பிரகலாதனை. அறிஞரின் அறிஞன் என்றும் தூயர் என்பவர் யாரினும் தூயான் என்றும் முன்னமே (6207) கூறியுள்ளார். |
இரணியன் பிரகலாதனை நோக்கிச் சினந்து கூறுதல் |
| 6235. | ' "இற்றை நாள் வரை, யான் உள நாள் முதல், இப் |
| பேர் |
| சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் |
| ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு இப் பெயர் |
| உரைத்தார்? |
| கற்றது ஆரொடு? சொல்லுதி, விரைந்து" எனக் |
| கனன்றான். |
| |
இற்றை நாள் வரை - இந்த நாள் வரையும்; யான் உள நாள்முதல் - நான் ஆட்சிக்கு வந்த நாள்முதலாக; இப்பேர் சொற்ற நாவையும் - இந்தப் பெயரைச் சொன்ன நாவையும்; கருதிய |