பக்கம் எண் :

110யுத்த காண்டம் 

6237.

' "மறம் கொள் வெஞ் செரு மலைகுவான், பல்

முறை வந்தான்,

கறங்கு வெஞ் சிறைக் கலுழன்தன் கடுமையின்,

கரந்தான்;

பிறங்கு தெண் திரைப் பெருங் கடல் புக்கு, இனம்

பெயராது,

உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு

உரைத்தார்?

 

மறம்கொள் வெஞ் செரு மலைகுவான் - வீரம் மிக்க கொடிய
போரை என்னுடன் செய்வதற்காக;  பல்முறைவந்தான் -  (நீ  கூறிய
அத்திருமால்)   பலமுறை வந்தான்;கறங்கு வெஞ்சிறை -  (எனக்குத்,
தோற்று) சுழன்று பறக்கின்ற வெம்மையான இறகுகளை உடைய;கலுழன்
தன் கடுமையின்  கரந்தான்
- வாகனமாகிய  கருடனது   விரைந்து
செல்லும்   வேகத்தால்   மறைந்தான்;  பிறங்கு    தெண் திரை -
பெருகிவரும் தெளிந்த   அலைகளைஉடைய;  பெருங்கடல் புக்கு -
பெரிய  பாற்கடலிலே புகுந்து; இனம்  பெயராது -  இன்னும் அந்த
இடத்தை   விட்டு   இடம்  பெயராது;   உறங்குவான்   பெயர் -
உறங்குபவனாகிய திருமாலின் பெயர்;   உறுதி   என்று  -  உறுதிப்
பேறுதரவல்லது என்று; ஆர் உனக்கு உரைத்தார் - யார் உனக்குச்
சொன்னார்கள்? 
 

வெஞ்செரு - கொடியபோர். மலைகுவான் - போரிடுதற்காக
(வானீற்று வினை எச்சம்). கறங்கு - காற்றாடி  போலச்  சுழன்று
பறத்தல். கலுழன் - கருடன்.   இனம் -   இன்னம்   என்பதன்
இடைக்குறை.
 

(49)

6238.

' "பரவை நுண் மணல் எண்ணினும், எண்ண

அரும் பரப்பின்

குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொலக்

குறைந்தார்;

அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால், அதற்கு

விரவு நன்மை என் ? துன்மதி ! விளம்பு" என

வெகுண்டான்.

 

துன்மதி  -  கெடுமதி கொண்டவனே ! பரவை  நுண்மணல்
எண்ணினும் 
-   கடற்கரையில்   உள்ள   நுண்ணிய   மணலை
எண்ணினாலும்;  எண்ணஅரும்   பரப்பின்  -  எண்ணுதற்கரிய
பரப்பினராக;குரவர் நம் குலத்துள்ளவர் - நம் குலத்து