முன்னோர்களாக வாழ்ந்த பலரும்;அவன் கொலக் குறைந்தார் - அத்திருமால் கொல்ல அழிந்து அளவில் குறைந்தனர்; அரவின் நாமத்தை - தனக்குப் பகையான பாம்பின் பெயரை; எலி இருந்து ஓதினால் - எலி அமைதியாய் இருந்து ஓதுவதால்; அதற்கு விரவும் நன்மை என் - அந்த எலிக்கு வந்து சேரும் நன்மை என்ன?;'விளம்பு' என வெகுண்டான் - சொல்லு எனக்கோபித்துக் கூறினான். |
பரவை - கடல். குரவர் - முன்னோர். 'அரவின் நாமத்தை எலி' என்ற உவமையின்மூலம் இரணியன் நாராயணனை அரவு என்றும், தம்மை எலி என்றும் உவமைப்படுத்தி திருமாலின் வலிமையை உறுதிப்படுத்தியது போல் கூறினானாம். |
(50) |
| 6239. | ' "வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் |
| அயிர்ப்பு இல் ஆற்றல் என் அனுசனை, ஏனம் ஒன்று |
| ஆகி, |
| எயிற்றினால் எறிந்து, இன் உயிர் உண்டவன் நாமம் |
| பயிற்றவோ, நினைப் பயந்தது நான்?" எனப் |
| பகர்ந்தான். |
| |
வயிற்றினுள் - தனது வயிற்றுக்குள்ளே;உலகு ஏழொடு ஏழையும் வைக்கும் - கீழுலகம் ஏழு, மேலுலகம் ஏழு ஆகிய பதினான்கு உலகங்களையும் வைக்கும்;அயிர்ப்பு இல் ஆற்றல்- ஐயத்துக்கிடமில்லாத வலிமை உடைய; என் அனுசனை- எனதுதம்பியான இரணியாட்சனை; ஏனம் ஒன்று ஆகி - பன்றி வடிவம் எடுத்து வந்து;எயிற்றினால் எறிந்து - தந்தங்களால் குத்தி;இன்உயிர் உண்டவன் நாமம் - அவனது இனிய உயிரை உண்டவனான அத்திருமாலின் பெயரை; பயிற்றவோ நினைப்பயந்தது நான்?- சொல்லுவதற்காக வா உன்னை நான் மகனாகப் பெற்றேன்?; எனப்பகர்ந்தான் - என்று கூறினான். |
அனுசன் - தம்பி பயிற்றுதல் - பலமுறை கூறுதல். |
"ஏனம் ஒன்றென எழுந்து வந்து எம் ஐயன் |
ஆவி உண்டவனை இன்றுநீ |
மானமின்றி எதிர் ஓதவோ உனை |
வளர்த்த தென்றிவை கிளர்த்தியே" |
| |
என்ற இரணியவதைப் பரணி (335) ஒப்புநோக்கத்தக்கது. |
(51) |