| 6240. | ' "ஒருவன், யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் |
| முதல்வன், |
| தருதல், காத்து, அவை தவிர்த்தல் என்று இவை |
| செயத் தக்கோன், |
| கருமத்தால் அன்றிக் காரணத்தால் உள்ள காட்சி, |
| திருவிலீ! மற்று இது எம் மறைப் பொருள் எனத் |
| தெரிந்தாய். |
| |
திருஇலீ - திருவில்லாதவனே (நல்ல பேறு இல்லாதவனே)!; ஒருவன் - ஒப்பற்ற ஒருவனாகிய நான்; யாவர்க்கும் எவற்றிற்கும் - இவ்வுலகில் வாழும் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும்; உலகிற்கும் முதல்வன் - இந்த உலகுக்கும் முதல்வனாயுள்ளேன்; தருதல், காத்தல், அவை தவிர்த்தல் என்று இவை செயத் தக்கோன் - எல்லா உயிர்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்று கூறப்படும் முத் தொழிலையும் செய்யத்தக்கவன் நானே;கருமத்தால் அன்றி - (இதில் நேரில் காணும்) காட்சி அளவையினால் அல்லாது; காரணத்தால் உள்ள காட்சி - கருதுதல் அளவையாகிய அனுமானப்பிரமாண உணர்வால்;மற்று இது - அறிந்து உணரும் இதனை; எம்மறைப் பொருள் எனத் தெரிந்தாய் - எந்த வேதத்தில் கூறப்படும் பொருள் என்று தெரிந்து கொண்டாய். |
தனக்குப் பின் தனது செல்வமனைத்தையும் துய்க்க வேண்டிய மகன் வீணாகப் பகைவன் பெயரைக் கூறி, செல்வத்தை இழக்கப் போகிறானே என்பதை உணர்த்துவான் 'திருவிலீ' எனப் பிரகலாதனை அழைத்தான் என்க. கருமம் - காட்சி காரணம் - அநுமானம் (கருதுதல்) |
(52) |
| 6241. | ' "ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை, பேர் |
| உலகின்; |
| வேதம் எங்கனம், அங்கனம் அவை சொன்ன |
| விதியால், |
| கோது இல் நல்வினை செய்தவர் உயர்குவர்; |
| குறித்துத் |
| தீது செய்தவர் தாழ்குவர்; இது மெய்ம்மை, தெரியின். |
| |
பேருலகின் - மிகப் பெரிய இந்த உலகத்திலே; ஆதி அந்தங்கள் - வேதத்தின் ஆரம்பமுதல் முடிவு வரை கூறுவது; இதனின் மற்று இல்லை - இதைவிட வேறு எதுவுமில்லை; வேதம் |